வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் பிடிக்காதவர்கள், வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் இல்லாதவர்கள்கூட, வெற்றிலையில் உள்ள மருத்துவக் குணத்தை மறுக்க முடியாது. வெற்றிலையில் அவ்வளவு பயன்கள் உள்ளது.
வெற்றிலையில் நீர்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், தயமின், விட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு திறன் கொண்ட சவிக்கால் என்னும் பொருளும் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வெற்றிலை பாக்கு மென்றால் சுவாச நோய்களான ஆஸ்துமா, இருமல், சளி போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும். வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவதால் கால்சியம் சத்து நேரடியாக நம் உடலுக்கு கிடைக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் வராது. மேலும் வாயுத் தொல்லை பிரச்சினையும் ஏற்படாது என்று மருத்துவர் கூறுகிறார்.
வெற்றிலையின் 10 நன்மைகள் | 10 betel-leaf health benefits
தொண்டை வலி: வெற்றிலையில் இருக்கக்கூடிய ஆண்டி பாக்டீரியல் எனும் வேதி பொருள் தொண்டை பகுதியில் ஏற்படக்கூடிய புண்களை சரி செய்து தொண்டை வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
தொண்டயில் உள்ள புண்கள், தொண்டை வலி முற்றிலுமாக குணமாக வெற்றிலையை அரைத்து அதன் சாற்றினை தினமும் 3 முறை குடித்துவர தொண்டை வலி மற்றும் தொண்டை புண்கள் விரைவில் ஆறிவிடும்.
வாய் துற்நாற்றம்: வெற்றிலையில் அதிகமாக ஆண்டி பாக்டீரியா உள்ளதால் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து சுவாச புத்துணர்ச்சி பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
வெற்றிலை சாப்பிடுவதால் புற்றுநோய் வராது. ஆனால் இலை அழுகியோ, மஞ்சள் நிறமாக இருந்தாலோ அதை சாப்பிட கூடாது. ஆண்களுக்கு வரக்கூடிய புராஸ்டேட் கேன்சர் வராமல் தடுக்கவும் உதவுவதாக மருத்துவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.