எல்லோர் வீட்டிலும் மசாலாகள், தானியங்கள் வைத்திருந்தால் வண்டு பூச்சிகள் வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அவற்றை எப்படி பாதுகாப்பது என்று தான் நிறைய பேருக்கு தெரியாது. இவற்றை பாதுகாப்பது ஈஸியான முறை தான். இவற்றை எப்படி பராமரிப்பது என்று ஸ்பைசி அண்ட் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
டிப்ஸ் 1: வீட்டில் உள்ள பருப்பு வகைகள், தானிய வகைகள், மசாலாக்கள் அனைத்தையும் ஒரு தட்டிலோ முரத்திலோ அல்லது பேப்பரிலோ எடுத்து பரப்பிவிட்டு நன்கு வெயிலில் காய விட வேண்டும். காலையில் 11 மணிக்கு போட்டு மாலை 4 மணி வரை காய போடலாம்.
பின்னர் சுத்தமாக கழுவிய ஒரு டப்பாவிலோ அல்லது கண்ணாடி பாட்டிலிலோ இதை எடுத்து போட்டு வைத்துக் கொள்ளலாம்.
டிப்ஸ் 2: அடுத்ததாக வெயிலில் காயப்போட முடியாதவர்கள் ஒரு பாத்திரத்தில் இந்த தானியத்தை சேர்த்து சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கைகளால் பிசைந்து எடுத்துக் கொள்ளவும். வண்டு, பூச்சி ஒரு வருடம் வரை விழாமல் இருக்கும்.
Advertisment
Advertisements
இதில் முக்கியமான ஒன்று இரண்டையும் நன்கு காய வைக்க வேண்டும். வெயிலில் காய வைக்கலாம். அல்லது நிழலிலாவது காய வைக்கலாம்.