உங்கள் வீட்டில் இட்லி செய்யும்போது, கொஞ்சம் கூட தட்டில் ஒட்டாம இட்லியை எடுக்க கிச்சனில் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள், எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்.
தென்னிந்திய மக்களின் தினசரி உணவு இட்லி, சாம்பார், சட்னி என்று உள்ளது. பலரும் தங்களுடைய வீட்டில் இட்லி, சாம்பார், சட்னி சுவையாக செய்தாலும், இந்த வேக வைத்த இட்லியை, இட்லித் தட்டில் இருந்து எடுப்பதில் கோட்டைவிட்டுவிடுவார்கள்.
தட்டில் இருந்து இட்லியை சூடாக எடுக்கும்போது தட்டிலேயே பிசுபிசுவென ஒட்டிக்கொள்ளும். இப்படி எடுக்கப்படும் இட்லி சாப்பிடும்போது, லேசாக பிசுபிசுப்போம், குழைந்தும் இருக்கும். அதனால், உங்கள் வீட்டில் இட்லி செய்யும்போது, கொஞ்சம் கூட தட்டில் ஒட்டாம இட்லியை எடுக்க கிச்சனில் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்.
இட்லி வெந்த பிறகு, இட்லி தட்டில் இருந்து சூடாக இட்லியை எடுப்பதற்கு முன்பு, இட்லி தட்டில் பின்புறம், குழாயில் இருந்து தண்ணீரை ஊற்றுங்கள், ஓரளவு சூடு குறைந்ததும் ஒரு கரண்டியை வைத்து இட்லியை எடுங்கள். கொஞ்சம் கூட தட்டில் ஒட்டாம இட்லி வாரும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இந்த டிப்ஸை உங்கள் வீட்டில் ஃபாலோ பண்ணி பாருங்கள், எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“