தமிழ்நாட்டில் இட்லி என்பது அன்றாட உணவாகி இருக்கிறது. இட்லி செய்வது என்பது ஒரு கலைதான். ஆம், இட்லியை சாப்பிடும் விதத்தில் பஞ்சு போல சாஃப்ட்டாக செய்ய வேண்டும். அப்படியே சாஃப்ட்டாக செய்தாலும், இட்லி செய்யும்போது, சூடான இட்லியைத் தட்டில் ஒட்டாமல் இட்லியை எடுப்பது என்பதும் ஒரு கலைதான். ஆனால், அவசரத்திற்கு, சூடான இட்லியை தட்டில் இருந்து எடுக்கும்போது, ஒட்டிக்கொள்வது உண்டு. இதனால், இட்லியின் தோற்றமே ஒரு மாதிரியாக இருக்கும். அதனால், சூடான இட்லி தட்டில் ஒட்டாமல் எடுக்க, ஈரத் தூணி டிப்ஸ் ஒன்றை உங்களுக்கு தருகிறோம்.
பொதுவாக இட்லி செய்யும்போது, இட்லி வெந்ததும், இட்லி குண்டானில் இருந்து, சூடான இட்லி தட்டை எடுத்ததும், உடனடியாக இட்லியை எடுப்பதற்கு முயற்சி செய்வோம். அதற்காக சிலர் இட்லி தட்டின் பின்பகுதியில் தண்ணீர் தெளிப்பார்கள், அல்லது இட்லி தட்டு மீது தண்ணீர் ஊற்றுவார்கள். அதனால், சில நேரங்களில் இட்லி பிசுபிசுப்பாக மாறிவிடும்.
அதனால், சூடான இட்லியை, இட்லி தட்டில் இருந்து ஒட்டாமல் எடுப்பதற்கு ஈரத்துணியைப் பயன்படுத்தலாம். அதாவது ஒரு காட்டன் துணியைத் தண்ணீரில் நனைத்து எடுத்துக்கொள்ளுங்கள், இட்லி குண்டானில் இருண்து இட்லி தட்டை எடுத்ததும், இட்லியை எடுப்பதற்கு, சூடான இட்லி தட்டின் பகுதியில், இந்த ஈரத்துணிவை வைத்து தடவுங்கள், சிறிது நேரத்திற்குப் பிறகு, நீங்கள் வழக்கம் போல, இட்லி எப்படி எடுப்பீர்களோ அதே போல எடுங்கள். சூடான இட்லி இட்லி தட்டில் ஒட்டாமல் அழகாக அப்படியே எடுத்துவிடலாம். இந்த டிப்ஸை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“