முள்ளங்கியில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் மூலநோய், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும். முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்வதால் சிறுநீர் நன்கு வெளியேறும். இதனால் சிறுநீர் பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும். மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும் பித்தப்பையினை சரி செய்யும்.
அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த முள்ளங்கியை வைத்து ஒரு முள்ளங்கி சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புளி
துவரம் பருப்பு
உப்பு
மஞ்சள் தூள்
பெருங்காயத்தூள்
எண்ணெய்
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
முள்ளங்கி
தக்காளி
கடுகு
உளுத்தம் பருப்பு
கருவேப்பிலை
கொத்தமல்லி தழை
சாம்பார் தூள்
செய்முறை
சாம்பார் செய்வது ஈஸி தான் அதில் உள்ள நீ சேர்த்து செய்தது உடலுக்கு நல்லதும் கூட இன்னும் சுவையாகவும் இருக்கும்.
சாம்பார் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு கிண்ணத்தில் சிறிது புளி எடுத்து ஊற வைக்கவும். பின்னர் ஒரு குக்கரில் துவர்ப்பு சேர்த்து கழுவி சுத்தம் செய்து 10 நிமிடம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் உப்பு, தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துவிட்டு வேக வைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதனுடன் முள்ளங்கி சேர்க்க வேண்டும். அதற்கு முள்ளங்கி எடுத்து தோல் சீவி விட்டு கழுவி வட்ட வட்டமாக நறுக்கி வைக்கவும். அந்த முள்ளங்கியை எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.
ஒரு இரண்டு மூன்று நிமிடத்திற்கு முள்ளங்கியை எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கிய பழுத்த தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் அதில் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும். அதன் பச்சை வாசனை நீங்கும் வரை அதை சிறிது நேரம் வதக்கவும். இது வதங்கியதும் அதில் முள்ளங்கி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
முள்ளங்கி சாம்பார் ஒரு முறை இப்படி செய்து பாருங்க / Perfect Mullangi Sambar Recipe / Radish Sambar
பின்னர் இதில் ஏற்கனவே ஊற வைத்த புளி கரைசலை உற்ற வேண்டும். முதலிலேயே புளி கரைசல் ஊற்றினால் முள்ளங்கியில் புளி தண்ணீர் இறங்கி சுவையாக இருக்கும்.
இதனை சிறிது நேரம் கொதிக்க விட்டு வேகவைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க விடவும். உப்பு மற்றும் தண்ணீர் தேவையான அளவு உள்ளதா என்று பார்த்து கொதிக்க விடவும்.
இதை தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் ஊற்றி மேலே சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான முள்ளங்கி சாம்பார் ரெடி ஆகிவிடும்.
இந்த தகவல்கள் அனைத்தும் பாட் டூ ப்ளேட்ஸ் கிச்சன் என்ற யூடியூப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.