நீர்த்துப் போன விந்தை கெட்டியாக்கும்... இந்த மூலிகையை இப்படி சாப்பிடுங்க: டாக்டர் சாலை மருதமலை முருகன்
நீர்த்துப் போன விந்தணுக்களை எப்படி கெட்டியாக மாற்றுவது என்று மருத்துவர் சாலை மருதமலை முருகன் தெரிவித்துள்ளார். இதற்காக மூலிகையை பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
நீர்த்துப் போன விந்தணுக்களை எப்படி கெட்டியாக மாற்றுவது என்று மருத்துவர் சாலை மருதமலை முருகன் தெரிவித்துள்ளார். இதற்காக மூலிகையை பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இன்றைய சூழலில் ஆண்களுக்கு விந்தணுக்கள் சார்ந்த பிரச்சனை நிறைய உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக மாறி வரும் உணவு முறை மாற்றம் வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவை ஆண்களின் விந்தணுக்களை நீர்த்துப் போகச் செய்கிறது. இதற்கு இயற்கையான முறையில் எவ்வாறு தீர்வு காணலாம் என்று மருத்துவர் சாலை மருதமலை முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
Advertisment
யானை நெருஞ்சி என்று ஒரு மூலிகை உள்ளது. இதனை பெருநெருஞ்சி என்று கூறுவார்கள் எனவும் மருத்துவர் சாலை மருதமலை முருகன் கூறுகிறார். எவ்வளவு நிறைய தண்ணீர் இருந்தாலும், இந்த யானை நெருஞ்சி மூலிகையை சிறிதளவு சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் கலக்கினால், அந்த தண்ணீர் பார்ப்பதற்கு விளக்கெண்ணெய் போன்று கெட்டியாகி விடும் என்று அவர் கூறுகிறார்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நமக்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது, யானை நெருஞ்சி மூலிகையின் தண்டை எடுத்து அதன் சில பகுதிகளை மட்டும் சற்று சிதைத்துக் கொள்ள வேண்டும். இதனை வைத்து தண்ணீரை நன்றாக கலக்க வேண்டும்.
இவ்வாறு 5 நிமிடங்களுக்கு செய்தால், தண்ணீர் பார்ப்பதற்கு ஜெல் போன்று மாறிவிடும். இந்த நீரை வேறு ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு கலக்கிய நீரை 50 முதல் 60 மில்லி லிட்டர் அளவிற்கு தினமும் குடிக்க வேண்டும். இது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
Advertisment
Advertisements
மேலும், ஆண்களின் விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்றும் ஆற்றல் இந்த யானை நெருஞ்சி சேர்த்த தண்ணீருக்கு உள்ளது. இதனை பயன்படுத்தும் போது ஆண்களின் நீர்த்துப் போன விந்தணுக்கள் கெட்டியாக மாறிவிடும். இதேபோல், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை இது சரி செய்யும்.
நன்றி - Kalaignar TV News Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.