நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க நட்ஸ் உதவுகிறது. நமது இதயம், மூளை, குடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு நட்ஸ் சாப்பிடலாம்.
குறிப்பாக இதய ரத்த குழாய்களில் ஆரோக்கியத்தை பொருத்தவரை வால்நட் சரியாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் பாலி அன் சாச்சுரேடட் கொழுப்பு சத்து இருக்கிறது. இதில் இருக்கும் ஆல்பா லினோலினிக் மற்றும் லினோலினிக் ஆசிட், வீக்கத்திற்கு எதிராக செயல்படுகிறது. இது ரத்த குழாய்களில் உட்புறத்தை வலுவாக்க உதவுகிறது.
ஒரு வாரத்தில் 4 முறைக்கு மேல் வால்நட் சாப்பிட்டவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு 37 %குறைந்துள்ளது. வால்நட்டில் இருக்கும் நார்சத்து, உடல் எடையை குறைக்கும். குறிப்பாக அடிக்கடி பசி எடுக்கும் தன்மையை குறைக்கும். நமது குடலில் இருக்கும் நுண்ணுயிரிகளை பாதுகாக்கும். மேலும் ப்ரோபயோட்டிக் பாக்டிரியாவை ஊக்கப்படுத்தும். இந்நிலையில் இதில் இருக்கும் ஒமேகா 3 சத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கிறது. இதில் இருக்கும் பையோ ஆக்டிவ் பொருள் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
மேலும் வயதானவர்கள் மத்தியில் நடத்தபட்ட ஆய்வில், 15 கிராம் வால்நட் மற்றும் 15 கிராமில் மற்ற நட்ஸ் கொடுத்தபோது, வயதானவர்களின் நினைவு சக்தி பாதிப்பிலிருந்து மீட்க உதவுகிறது. மேலும் நினைவு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது.
28 கிராம் வால்நட் தினமும் எடுத்துக்கொண்டால், ரத்த அழுத்தம் சீராக இருக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது. மேலும் இதில் இருக்கும் பாலி அன் சாச்சுரேடட் கொழுப்பு சத்து, பாலிபினால்ஸ், வைட்டமின் ஈ மூளையின் வீக்கத்தை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றனர்.
வால்நட் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். இந்நிலையில் உடல் எடை அதிகரிக்காமல் இருந்தால் சர்க்கரை நோய் ஏற்படாது.