இந்த கோபி 65 ஹைதரபாத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்யச் சொல்லி கேப்பாங்க.
தேவையான பொருட்கள்
ஒரு காளிப்பிளவர்
1 ஸ்பூன் அரிசி மாவு
அரை டீஸ்பூன் மிளகு பொடி
அரை ஸ்பூன் மிளகாய் பொடி
1 ஸ்பூன் மைதா மாவு
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 ஸ்பூன் கான்பிளவர்
கொஞ்சம் தண்ணீர்
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
உப்பு
பொறிக்கும் அளவு எண்ணெய்
1 வெங்காய்ம் நறுக்கியது
2 ஸ்பூன் கடலை எண்ணெய்
4 வத்தல்
1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு
அரை ஸ்பூன் பச்சை மிளகாய் நறுக்கியது
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
அரை ஸ்பூன் சீரகத் தூள்
அரை ஸ்பூன் மிளகாய் தூள்
அரை ஸ்பூன் மல்லித் தூள்
கால் ஸ்பூன் மிளகு தூள்
3 ஸ்பூன் கட்டியான தயிர்
கொத்தமல்லி 2 ஸ்பூன்
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் காளிப்பிளவரை சேர்க்கவும். அதில் அரிசி மாவு, மிளகு பொடி, மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு விழுது, கான்பிளவர், மைதா மாவு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளரவும். இதை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்து வைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். அதில் வத்தல் , பூண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் நறுக்கியது, சேர்த்து நன்றாக கிளரவும். தொடர்ந்து அதில் வெங்காயம் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து அதில் மஞசள் பொடி, சீரகப் பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி சேர்த்து நன்றாக கிளரவும். கொஞ்சம் உப்பு சேர்த்து கிளரவும். இதில் தயிர் சேர்த்து கிளரவும். தொடர்ந்து பொறித்த காளிப்பிளவரை இதில் சேர்த்து கிளரவும். அடுப்பை அணைத்துவிட்டு கிளரவும். இதில் வேண்டும் என்றால் கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கிளரவும்.