ஹைப்போ தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி செயல்பாட்டுக் குறைவினால் ஏற்படுவதாகும். தைராய்டு ஹார்மோன்கள் போதுமான அளவு சுரக்காமல், சமநிலையற்ற நிலையில் இருந்தால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. ஹைப்போ தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறிகள் எடை அதிகரிப்பு, சோம்பல், மறதி, கரகரப்பான குரல், முடி உதிர்தல் போன்றவை ஆகும். மருத்துவர்களின் ஆலோசனைப் படி உணவு உட்கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக சில உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். அவை பற்றி இங்கு பார்ப்போம்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் கூடாது
பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Processed foods) packaged pre-cooked foods என்பது கவுரில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகள் (உருளைக்கிழங்கு சிப்ஸ், வேபர்ஸ் (wafers), சிக்கன் நகெட்ஸ் போன்றவை ஆகும். பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு சோடியம் உள்ளது. தைராய்டு உள்ளவர்கள் சோடியம் உட்கொள்வதை தவிர்க்க அல்லது குறைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிக சோடியம் கொண்ட உணவு மனிதர்களின் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சோயா பீன்ஸ் மற்றும் அதன் பொருட்கள்
சோயா பீன்ஸ் மற்றும் அதன் பொருட்கள் டோஃபு, எடமேம், மிசோ போன்றவை ஐசோஃப்ளேவோன்கள் எனப்படும் காம்பவுண்ட் கொண்டுள்ளது. ஐசோஃப்ளேவோன்கள், தைராய்டு வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். தைராய்டு ஏற்கனவே உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். தைராய்டு மருந்தின் செயல்பாட்டைக் குறைத்துவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கோதுமை தவிர்க்க வேண்டும்
தைராய்டு உள்ளவர்கள் க்ளூட்டன் புரதம் (கோதுமை, கம்பு, பார்லி) உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். க்ளூட்டன், தைராய்டு மருந்துகளின் செயல்திறனை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தைராய்டு பாதிக்கப்பட்ட பலருக்கு செலியாக் பிரச்சனை (celiac disease)உள்ளது. இதனால் க்ளூட்டன் புரத உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
அதிகம் கொழுப்பு உள்ள உணவுகள்
உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் தேவைப்பட்டாலும், ஆரோக்கியமற்ற (கெட்ட) கொழுப்பு உணவுகள் (unhealthy fatty foods) தைராய்டு உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். கொழுப்பு நிறைந்த உணவுகள் வறுத்த உணவுகள், இறைச்சி, பால் பொருட்கள் போன்றவை ஆகும். கெட்ட கொழுப்பு உணவுகள் தைராய்டு மருந்துகளின் செயல்திறனை குறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்
பீன்ஸ், பருப்பு வகைகள், பிரெட் (bread),காய்கறிகள் போன்றவை அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளாகும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் செரிமான அமைப்பை அதிக வேலை செய்ய வைக்கிறது. அதாவது அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் ஆகிறது. மேலும், இது தைராய்டு மருந்துகளின் செயல்திறனை பாதிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீங்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், அதற்கு ஏற்ப, செரிமானத்திற்கு ஏற்ப, உங்கள் தைராய்டு மருந்தின் அளவை அதிகரிக்க உங்கள் மருத்துவரிடம் கேட்டு பெறலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“