ரேசன் பச்சரிசியை பயன்படுத்தி இடியாப்பத்திற்கு எப்படி மாவு அரைப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி
நல்லெண்ணெய்
உப்பு
செய்முறை:
ரேஷன் கடையில் கிடைக்கும் பச்சரிசியை தூசு இல்லாமல் புடைத்து நன்கு கழுவி ஒரு நாள் முழுவதும் காய வைக்க வேண்டும். பின்னர் அதனை மெஷினில் கொடுத்து இடியாப்பத்திற்கு தேவையான அளவு நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு போட் லேசாக சூடாக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மாவு சேர்த்து அதில் சுடுதண்ணீர் சிறிது ஊற்றி ஒரு ஸ்பூன் வைத்து கிளறி விடவும்.
இடியாப்பத்துக்கு மாவு அரைப்பது எப்படி / குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது how to make idiyappam
பின்னர் இதனை இலகுவாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும். மாவு பிசையும் போது நல்லெண்ணெய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நீரூற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதித்ததும் தட்டில் துணி போட்ட அதில் மாவு பிழிந்து விட வேண்டும். அதற்கு ஒரு முறுக்கு ஒலக்கில் மாவை போட்டு பிழிந்து விடவும். இதனை இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கவும். இதற்கு எப்போதும் போல தேங்காய் பால் வைத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“