இட்லி மாவு ரெசிபி மிகவும் தனித்துவமானது. ஏனென்றால், இதில் வெந்தயம், அவல் எதுவுமே சேர்க்காமல், ரேஷன் அரிசியைப் பயன்படுத்தி எப்படி பஞ்சு போல இட்லி தயாரிக்கலாம்என்றுஹோம்மேட்ரெசிபிஸ்தமிழ்யூடியூப்பக்கத்தில்கூறியிருப்பதைபற்றிபார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
புழுங்கல் அரிசி - 8 படி
பச்சரிசி - 4 படி
உளுந்து - 1 படி
சாதம் - ஒரு கைப்பிடி
உப்பு
செய்முறை:
உளுந்தை மூன்று முறை நன்கு கழுவி, முக்கால் பாகம் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.அரிசியையும் மூன்று முறை நன்கு கழுவி, முழுவதுமாக மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
முதலில் உளுந்தை மாவாட்டுக்கு எடுத்துக்கொள்ளவும். ஊற வைத்த தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்துவிட்டு, சுமார் 10 நிமிடம் நன்கு பளபளவென பொங்கி வரும் அளவுக்கு ஆட்டவும்.ஆட்டிய உளுந்தை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு, அதே மாவாட்டுல அரிசியைச் சேர்க்கவும்.
அரிசியுடன் ஒரு கைப்பிடி சாதத்தைச் சேர்த்து நன்கு அரைக்கவும். மாவாட்டியில் இருக்கும் அரிசி வெடிக்காமல் இருக்க, ஒரு கரண்டி தண்ணீரையும் சேர்த்து ஆட்டவும்.அரைத்த அரிசி மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். மாவாட்டியில் இருந்து எல்லா மாவையும் வழித்த பிறகு, அரை கிண்ணம் தண்ணீரைக் கலக்கலாம்.
மாவு தயாரானதும், தேவையான அளவு உப்பு சேர்த்து, கரண்டியால் நன்கு கலக்கவும். கைகளால் கலப்பதைத் தவிர்க்கவும்.வ்கலந்த மாவை, இட்லி செய்யத் தேவையான அளவை மட்டும் ஒரு டப்பாவில் எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள மாவை ஃபிரிட்ஜில் வைக்கலாம்.மறுநாள் காலை மாவு நன்கு பொங்கி, இட்லி செய்வதற்குத் தயாராக இருக்கும். இந்த மாவில் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
மாவை லேசாகக் கலந்து, இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு, மாவை ஊற்றவும்.கீழ் தட்டை முதலில் இட்லி பாத்திரத்தில் வைத்து, 2 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.பிறகு மீதமுள்ள தட்டுக்களை அடுக்கி, இட்லி பாத்திரத்தை மூடி, 10 நிமிடம் வேக வைக்கவும்.சூடான இட்லியின் மீது சிறிது தண்ணீர் தெளித்து, பின்னர் துணியில் இருந்து எடுத்து, ஒரு சூடான பாத்திரத்தில் அடுக்கவும். பஞ்சு போன்ற மென்மையான இட்லி தயார்.