இன்றைய சூழலில் இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது மிகவும் கடினமான ஒன்று தான். என்ன பொருள் சேர்த்து மாவு அரைத்தாலும் சாஃப்ட் இட்லி கிடைப்பது இல்லை என்று கூறுபவர்கள் இனி இந்த முறையை பின்பற்றுங்கள்.
சோடா, ஜவ்வரிசி, அவல் எதுவுமே இல்லாமல் இட்லி சாஃப்டா வரனும் அப்படின்ன இந்த ஒரு வழி தான் பெஸ்ட். சீக்கிரமாவும் மாவு அரைத்து விடலாம். இட்லி சுடுவதற்கு கவலையும் இருக்காது.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 4 கப்
பச்சை அரிசி - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 3/4 கப்
வெந்தய விதைகள் - 1 ஸ்பூன்
ஒரு கைப்பிடி பச்சரிசி
இவை அனைத்தையும் 4 மணி நேரம் ஊறவைத்து பின் அரைக்கவும். இதற்கு தகுந்தாற்போல உங்கள் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம்.
செய்முறை
இட்லி அரிசி, வெந்தயம், பச்சரிசி, உளுந்து இதை அனைத்தையும் நன்றாக கழுவி ஊற வைக்கவும். உளுந்தை தனியாக ஊற வைக்க வேண்டும்.
இதனை 4 முதல் 5 மணி நேரம் இது நன்கு ஊரியதும் உளுந்தை முதலில் கிரைண்டரில் அரைக்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி உளுந்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சோடா ஜவ்வரிசி அவல் இல்லாம சாப்ட் இட்லி செய்ய முடியுமா| உளுந்து இப்படிதாங்க அரைக்கனும்
பின்னர் மாவு அரைப்பதற்கு முன் ஊறவைத்த அரிசியில் சிறிது சாதத்தை சேர்த்துக் கொள்ளவும். உளுந்து மைய அரைந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு கிரைண்டரில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து அரைக்கவும்.
உளுந்து அரிசி மாவு இரண்டையும் நன்றாக கலந்து உப்பு போட்டு கைவைத்து கரைத்து புளிக்க வைக்கவும் மாவு புளித்து வந்ததும் எப்போதும் போல இட்லி தோசை ஊற்றி சாப்பிடலாம்.
இட்லி சாஃப்டா பூ போல இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“