வீட்டில் சுவையான, பஞ்சு போன்ற மென்மையான மல்லி பூ இட்லி செய்வது எப்படி என்பதை இந்த சமையல் குறிப்பு விளக்குகிறது. இதனுடன், இட்லியின் சுவையை மேம்படுத்தும் மசாலா சட்னியும் தயாரிக்கும் முறை பற்றி செஃப் தீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். ளது.
இட்லி மாவுயாரிக்கும் விதம்:1 கிலோ இட்லி அரிசிக்கு 50 கிராம் உளுந்து. இந்த விகிதம் இட்லியை மல்லிகைப்பூ போல மென்மையாகவும், வெள்ளையாகவும் மாற்ற உதவும். அரிசியை 2 மணிநேரமும், உளுந்தை 1.5 மணிநேரமும் தனித்தனியாக ஊறவைக்கவும்.
மாவை அரைக்கும்போது, அது சூடாகாமல் இருக்க, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இது இட்லிக்கு பஞ்சு போன்ற மென்மைத்தன்மையை கொடுக்கும். மாவு இட்லித் துணியில் ஒட்டாமல் இருக்க, அரைக்கும் மாவில் சிறிது ஆமணக்கு முத்து (விளக்கெண்ணெய்) சேர்க்கலாம்.
மல்லிப் பூ போன்ற வெண்மையான மற்றும் பஞ்சு போன்ற இட்லிக்கு, அரிசி மற்றும் உளுந்து சரியான விகிதத்தில் ஊறவைப்பது மிக முக்கியம். முதலில், இட்லி அரிசியை சுத்தமாக கழுவி, சுமார் 2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அதேபோல், உளுத்தம் பருப்பை கழுவி, ஒன்றரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இவ்வாறு தனித்தனியாக ஊறவைப்பது மாவு மென்மையாக அரைப்பட உதவும்.
அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து, 8 முதல் 10 மணிநேரம் புளிக்க வைக்கவும். மாவு நன்கு புளித்த பின்னரே, இட்லி ஊற்ற வேண்டும். புளித்த மாவில் இட்லி ஊற்றும்போதுதான், மென்மையான மற்றும் சுவையான இட்லிகள் கிடைக்கும்.
மசாலா சட்னி தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்
காய்ந்த மிளகாய்
கடலைப்பருப்பு
சீரகம்
கொத்தமல்லி
வெங்காயம்
தக்காளி
புதினா
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகம், கொத்தமல்லி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, தக்காளியை தனியாக வதக்கிக் கொள்ளவும்.
இறுதியாக, வதக்கிய பொருட்கள் அனைத்தையும் புதினா மற்றும் கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, சுவையான மசாலா சட்னி தயாரிக்கலாம். இட்லியுடன் இந்த சட்னி சேர்த்து சாப்பிடும்போது, சுவை தனித்துவமாக இருக்கும்.