ரேஷன் அரிசியில் சாஃப்ட் இட்லி சமைப்பது எப்படி என்பது இங்கே.
Advertisment
இட்லி மாவுக்கு
ஒரு பாத்திரத்தில் 6 டம்ளர் ரேஷன் புழுங்கல் அரிசி, 2 டம்ளர் பச்சரிசி எடுத்து, நன்கு கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் உளுந்து எடுத்து நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
கிரைண்டரில் உளுந்து போட்டு ஐஸ்வாட்டர் சேர்த்து அரைக்கவும். அடுத்து அரிசி அரைக்கவும். அரிசி மைய அரைக்காமல் கையில் பட்டால் கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும் அளவுக்கு அரைக்கவும்.
இரண்டு மாவையும் ஒரே பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி 8 மணி நேரம் வைக்கவும்.
இட்லி மாவு தயார்.
இப்போது அடுப்பில் இட்லி சட்டி வைத்து சூடானதும் மாவு பாத்திரத்தில் மேல் பகுதியில் இருந்து மாவை மட்டும் லேசாக கலக்கி எடுத்து இட்லி தட்டில் ஊற்றவும்.
10 நிமிடம் வேகவைத்தால் போதும்.
சுடசுட சாஃப்ட் இட்லி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“