இட்லி, தோசைக்கு என்ன சட்னி சாம்பார் செய்வது என்று பெரிய குழப்பமாக உள்ளதா? அப்படி என்றால் ஒரு கப் தயிர் வைத்து கார சட்னி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.
வீட்டில் காய்கறிகள் மற்றும் தக்காளி இல்லாத நேரத்திலும் இதை செய்யலாம். எல்லோரும் கூடுதலாக இரண்டு இட்லி சாப்பிடுவார்கள் அப்படிப்பட்ட தயிர் காரச்சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தயிர்
உப்பு
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
எண்ணெய்
கடுகு
சீரகம்
பெரிய வெங்காயம்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
கொத்தமல்லி தழை
கரம் மசாலா
செய்முறை
ஒரு பவுலில் ஒரு கப் தயிர் சேர்த்து கட்டி இல்லாமல் விஸ்க் வைத்து கரைக்கவும். பின்னர் அதில் உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, சீரகம், ஒரு பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேரத்து வெங்காயம் லேசாக சிவந்து வரும் வரை வதக்கவும். பின்னர் அதில் சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
ஒரு கப் தயிர் இருந்தா இட்லி தோசைக்கு அசத்தலா ஒரு சைடு டிஷ் - EASY CHUTNEY - SIDE DISH FOR IDLI DOSA
பச்சை வசம் நீங்கியதும் தயிர் மசாலாவை சேர்த்து கலந்து மூடி போட்டு கொதிக்க விடவும். பின்னர் மூடியை திறந்து கலந்து விட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். பின்னர் அதில் சிறிது கொத்தமல்லி தழை மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
நல்ல மணம் வரும் போது இறக்கி இட்லி்,தோசை, சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“