காரைக்குடி செட்டிநாடு உணவு என்றாலே தானி சுவையும் ஸ்டைலும் இருக்கும். அப்படிப்பட்ட கள்ளவீட்டு அவியல் எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்தக் கள்ள விட்டு அவியல் இட்லி, தோசை,சப்பாத்தி என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பிரிஞ்சி இலை
உருளைக்கிழங்கு
தக்காளி
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
புளி
முழு கரம் மசாலா, எண்ணெய்
உப்பு, பெருஞ்சீரகம்
சீரகம்
கருப்பு மிளகு
கிராம்பு
காசா கசா
கொத்தமல்லி
கறிவேப்பிலை
தேங்காய்
செய்முறை
ஒரு கடாயில் கொத்தமல்லி, சோம்பு, பொட்டுக்கடலை, மிளகு, சீரகம், கசகசா, தேங்காய் துருவல்,பச்சை மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்து நன்கு மைய சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இட்லி தோசைக்கு ஏத்த செட்டிநாடு அவியல் | 150 வருட பழமையான வீடு | CDK 845 | Chef Deena's Kitchen
ஒரு பாத்திரத்தில் கடலை எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் அன்னாசிப்பூ, பட்டை, லவங்கம், சீரகம், சோம்பு, இலை, கல்பாசி அனைத்தையும் போட்டு தாளிக்க வேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி அதில் மஞ்சள் தூள் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஊற்றி புளிக்கரைசலையும் ஊற்றி கலந்து விடவும்.
காய் வேகும் அளவிற்கு சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு மூடி வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும் காய் வெந்ததும் இறக்கி இட்லி தோசைக்கு வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“