தேவையான பொருட்கள்
வாழைக்காய்
உப்பு
பெருங்காயம்
சோடா உப்பு
மிளகாய் தூள்
எண்ணெய்
இட்லி மாவு
கடலை மாவு
செய்முறை
முதலில் வாழக்காயை இருபுறமும் காம்புகளை நீக்கி விட்டு மேல் தோலை நீக்கி சிறிது சிறிதாக சீவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு ,பெருங்காயம், சோடா உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு எண்ணெயை சூடாக்கி கலந்து வைத்துள்ள கலவையில் சேர்க்கவும்.பிறகு கடலை மாவையும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும்.
இதன் பிறகு 1 கப் இட்லி மாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைத்துள்ள எண்ணெயில் சீவி வைத்துள்ள வாழக்காயை பஜ்ஜி மாவில் தடவி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுடச்சுட பஜ்ஜி தயாராகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“