இட்லிக்கு சூப்பர் ஃபாஸ்ட் குருமா: குழந்தைங்க ரொம்ப விரும்புவாங்க!
நாம் இன்று பார்க்கவிருக்கும் குருமாவை அதனை விட சீக்கிரமாகவும், எளிமையாகவும் செய்து விடலாம். குறிப்பாக, குழந்தைகள் இவற்றை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
நாம் இன்று பார்க்கவிருக்கும் குருமாவை அதனை விட சீக்கிரமாகவும், எளிமையாகவும் செய்து விடலாம். குறிப்பாக, குழந்தைகள் இவற்றை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
நம்முடைய அன்றாட உணவுகளில் ஒன்றாக இட்லி உள்ளது. இட்லியுடன் பல வகை சாம்பார், சட்னிகளை சேர்த்து ருசித்து இருப்போம். அவற்றை நம்முடைய வீடுகளில் தயார் செய்தும் அசத்தி இருப்போம். ஆனால், குருமா உடன் அதிகம் ருசித்திருக்க மாட்டோம். ஏன்னென்றால், குருமா தயார் செய்ய நேரம் எடுக்கும் என்பதால், அதனை நேரம் இருக்கும் சமயங்களில் மட்டும் செய்திருப்போம்.
Advertisment
ஆனால், நாம் இன்று பார்க்கவிருக்கும் குருமாவை அதனை விட சீக்கிரமாகவும், எளிமையாகவும் செய்து விடலாம். குறிப்பாக, குழந்தைகள் இவற்றை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில், நேரம் அதிகம் எடுக்காத சிம்பிள் மற்றும் டேஸ்டியான குருமா எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பட்டை - சிறிய துண்டு கிராம்பு - 2 பெரிய வெங்காயம் - 1 கருவேப்பிலை தக்காளி 1 (பெரியது) மஞ்சள் தூள் - சிறிதளவு உருளைக்கிழங்கு - 2 (அவித்து தோல் உரித்தது) தண்ணீர் - 3 கப் உப்பு - தேவையான அளவு மல்லி தழை - சிறிதளவு
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் ஒரு கடாய் எடுத்து அதனை சூடேற்றவும். பிறகு அரைக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம், சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை, தேங்காய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இவற்றின் சூடு ஆறியதும், ஒரு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
இதன்பிறகு, ஒரு கடாய் எடுத்து அதனை சூடேற்றவும். பிறகு அதில் பட்டை மற்றும் கிராம்பு சேர்க்கவும். இவை பொரிந்து வந்ததும், அவற்றில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைச் சேர்க்கவும். பின்னர் கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
தொடர்ந்து, நறுக்கிய தக்காளியைச் சேர்த்த்து நன்கு மசிய வதக்கவும். பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். இதன்பின்னர், அவித்து தோல் உரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும். இவற்றுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். பிறகு உப்பு சேர்த்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து கீழே இறக்கினால் நீங்கள் எதிர்பார்த்த ருசியான குருமா தயார். அவற்றை பஞ்சு போன்ற இட்லிகளுடன் சேர்த்து ருசிக்கலாம்.