மஞ்சூரியன் ஸ்டைலில் இட்லி தாளிப்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
இட்லிகள் – 5
இஞ்சி -பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார் – 1 ஸ்பூன்
கடலை மாவு – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்
சீரகத் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கலர் பவுடர் – ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் இட்லிகளை நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரம் எடுத்து இட்லியை போட்டு பின்பு அதோடு இஞ்சி -பூண்டு விழுது, கார்ன் ஃப்ளார், கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள், கலர் பவுடர், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து, கலந்து வைத்துள்ள இட்லிகளை ஐந்தாறாகப் எண்ணெயில் போட்டுப் வறுக்கவும். சுவையான காரசாரமான இட்லி மஞ்சூரியன் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“