இந்த 5 பொருட்கள் முக்கியம்... ஃபர்ஸ்ட் கிளாஸ் இட்லி மிளகாய் பொடி: செஃப் தீனா சொல்றத கேளுங்க!
பஞ்சு போன்ற சாஃப்ட் இட்லிகளுக்கு ஏற்ற டேஸ்டியான இட்லி மிளகாய் பொடி எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். இந்த ரெசிபியை செஃப் தீனா கும்பகோணம் வரை சென்று தேடி கண்டுபிடித்து வழங்கியுள்ளார்.
தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக ஒன்றாக இட்லி உள்ளது. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் உணவாகவும் இட்லி உள்ளது.
Advertisment
அந்த வகையில், பஞ்சு போன்ற சாஃப்ட் இட்லிகளுடன் சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகளை சேர்த்து ருசித்தால் அசத்தலாக இருக்கும். ஒருவேளை சாம்பார், சட்னிகளை சாப்பிட்டு உங்களுக்கு போர் அடித்தாலோ அல்லது சாம்பார், சட்னி தேவையான பொருட்கள் நம்முடைய வீட்டில் இல்லை என்றாலோ, நீங்கள் நிச்சயம் தேடும் ஒன்றாக இட்லி பொடி இருக்கும்.
இந்நிலையில், பஞ்சு போன்ற சாஃப்ட் இட்லிகளுக்கு ஏற்ற டேஸ்டியான இட்லி மிளகாய் பொடி எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். இந்த ரெசிபியை செஃப் தீனா கும்பகோணம் வரை சென்று தேடி கண்டுபிடித்து வழங்கியுள்ளார்.
தேவையான பொருட்கள்:
வர மிளகாய் - 1/2 கிலோ உளுந்தம் பருப்பு - 6 கிலோ கடலைப் பருப்பு - 2 கிலோ பெருங்காயம் - 100 கிராம் எண்ணெய் - 2 லிட்டர் கல் உப்பு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் அகலமான ஒரு பாத்திரம் எடுத்து, அதனை எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அவை சூடானதும், அதில் வர மிளகாய் சேர்க்கவும். அதனை நன்கு வறுத்த பிறகு அப்படி தனியாக எடுத்து வைக்கவும். சுமார் 20 நிமிடங்கள் தனியாக வைத்து, அவற்றில் உள்ள எண்ணெய் சுத்தமாக வடிய விடவும்.
இதனிடையே, கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில் பெருங்காயம் சேர்க்கவும். அவற்றை வடகம் போல் எண்ணெயில் போட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றுடன் கடலைப் பருப்பை சேர்க்கவும். அவற்றை கரண்டியால் கலந்து விட்ட ஒரு நிமிடம் கழித்து உளுந்தம் பருப்பை சேர்க்கவும். மிதமான சூட்டில் வைத்து இவற்றை சுமார் 20 நிமிடங்களுக்கு நன்கு கரண்டியால் கிளறி வறுக்கவும்.
பருப்புகள் 50 சதவீதம் வறுபட்ட உடன், ஏற்கனவே வறுத்து எடுத்து வைத்துள்ள மிளகாய் சேர்க்கவும். பிறகு அவற்றில் இருக்கும் எண்ணெயை நன்கு வடித்து எடுக்கவும். பிறகு சுத்தமான பேப்பர் மூலம் அதில் இருக்கும் எண்ணெயை பிரித்து எடுக்கவும்.
இந்த கலவை நன்கு ஆறி வந்த பின் கல் உப்பு சேர்க்கவும். இவற்றை இப்போது மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால், டேஸ்டியான இட்லி மிளகாய் பொடி ரெடி.