இட்லி பொடி என்பது இட்லிக்கு மட்டும் அல்ல தோசை, சாப்பாட்டிற்கு கூட வைத்து சாப்பிடலாம். குறிப்பாக ஹால்டலில் தங்கி படிப்பவர்கள், தொலைத் தூரத்தில் பணிபுரிபவர்கள் இட்லி பொடி, பருப்பு பொடி என அனைத்தும் எப்போதும் வைத்திருப்பவர். குழம்பு பிடிக்கவில்லை என்றால் இட்லி பொடி வைத்து சாப்பிட்டுவிட்டு செல்லலாம். அந்தவகையில் புதினா இலை சேர்த்து சுவை நிறைந்த இட்லி பொடி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தனியா – 2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
புதினா – கைப்பிடி அளவு
பூண்டு – 5 பல்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முதலில் தனியாவை போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் அதே கடாயில் கடலைப்பருப்பு , உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின் காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.
அடுத்து, பருப்பு வகைகளை வறுத்தபின் புதினாவை தனியாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின் பூண்டையும் வதக்கிக்கொள்ளுங்கள்.
இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்து பருப்பு , காய்ந்த மிளகாய் மற்றும் மசாலா வகைகளை சேர்த்து முதலில் அரைக்கவும். பின் புதினா மற்றும் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இட்லி பொடி தயார். இட்லி, தோசை, சுடச் சுடச் சாதத்திற்கு பிசைந்து சாப்பிடலாம். நெய் சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”