இட்லி மென்மையாக வர நாம் பல போராட்டங்களை கடந்து வந்திருப்போம். ஆனால் நம்மால் எளிதாக இட்லியை மென்மையாக அவிக்க முடியாது. பின்வருமாறு செய்யுங்கள் .
கொள்ளுவை சிறிது நேரம் ஊறவைத்து இட்லி மாவுடன் சேர்த்து அரைத்தால் மென்மையாக இட்லி வரும். இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும்போது அத்துடன் ஒரு டீஸ்பூன் கோதுமை சேர்த்து ஊறவைத்து அரைக்க வேண்டும்.
மிளகாய் பொடி தடவிய இட்லியை பேக் செய்யு முன், இட்லி மீது தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி செய்தால் இட்லி வறண்டு போகாது.

இட்லி அவிக்கும்போது, நீங்கள் இட்லித் தட்டில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்று நினத்தால், இட்லி வெந்ததும் தண்ணீர் தெளித்து தட்டை திருப்பிவிட்டு இட்லியை சிறிது நேரம் கழுத்து எடுக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் இட்லியை எடுக்க முடியும்.
இட்லி மாவு புளித்துவிட்டால் 2 முதல் 3 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் தண்ணீர் மேலே நிற்கும் அதை வடிகட்ட வேண்டும். தற்போது மாவில் புளிப்புத் தன்மை நீங்கும்.