இட்லி பொடியை இப்படி செய்தால், சுவை ரொம்பவே நல்லா இருக்கும்.
தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை - அரை கப், கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன், மிளகு - அரை டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பூண்டு - 4 பற்கள், பெருங்காயத் தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப.
இட்லி பொடி செய்முறை :
வாணலியை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலையை கொட்டி வறுக்கவும். பின்னர் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை கொட்டி வறுங்கள். வறுத்த கறிவேப்பிலையை மிக்சியில் கொட்டி அரைக்கவும். பிறகு அதனுடன் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு, பூண்டு, மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும். இப்போது சுவையான கறிவேப்பிலை பொடி ரெடி. எளிதில் கெட்டுப் போகாத இந்த இட்லி பொடியை சில வாரங்கள் வரை வைத்து பயன்படுத்த முடியும்.