Advertisment

உடல் எடை குறைக்க உதவும் 2 வகை இட்லி ரெசிபி: மிஸ் பண்ணாதீங்க

உடல் எடை குறைய வேண்டும் என்று நினைத்தால் அவித்த உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். இந்நிலையில் இந்த இரண்டு வகையான இட்லியை நீங்கள் தவறாமல் செய்து பாருங்கள்.

author-image
WebDesk
Jan 17, 2023 12:39 IST
New Update
உடல் எடை குறைக்க உதவும் 2 வகை இட்லி ரெசிபி: மிஸ் பண்ணாதீங்க

உடல் எடை குறைய வேண்டும் என்று  நினைத்தால் அவித்த உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். இந்நிலையில் இந்த இரண்டு  வகையான இட்லியை நீங்கள் தவறாமல் செய்து பாருங்கள்.

Advertisment

ஓட்ஸ் இட்லி

2 கப் ஓட்ஸ், உளுந்தப் பருப்பு, கடுகு, பச்சை மிளகாய், இட்லி மாவு, மஞ்சள் பொடி.

செய்முறை: ஓட்ஸை நன்றாக பொன்னிறமாக வறுக்க வேண்டும்.  தொடர்ந்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தப் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், கேரட்  ஆகியவற்றை வதக்க வேண்டும். தொடர்ந்து ஓட்ஸை பொடி செய்து, இட்லி மாவில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து அதில் வதக்கிய கேரட் கலவையை சேர்கக்வும். தொடர்ந்து இட்லி அவிப்பது போல் அவிக்க வேண்டும்,

publive-image

பீட்ரூட் இட்லி

பீட்ரூட், தயிர், உப்பு, இஞ்சி, இட்லி மாவு , எண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, பச்சை மிளகாய்.

செய்முறை : மிக்ஸியில் பீட்ரூட், இஞ்சி, தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த கலவையை இட்லி மாவில் ஊற்றிவிட்டு. ஒரு  பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து கொட்டவும். தொடர்ந்து தயிர் சேர்க்கவும்.

தொடர்ந்து இட்லி பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில இட்லி மாவை ஊற்ற வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து பீட்ரூட் இட்லி ரெடி.    

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment