Advertisment

கோதுமை, கோழிக்கறி, காரம்… பைல்ஸ் உள்ளவர்கள் தொடாதீர்கள்; டாக்டர் சிவராமன்

பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் கோதுமை, கோழிக்கறி, காரம் போன்றவற்றை சாப்பிட கூடாது என டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Broiler chicken

பைல்ஸ் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்

அலட்சியம் காட்டாமல் உரிய நேரத்தில் சிகிச்சை பெற வேண்டிய நோய் பாதிப்புகளில் ஒன்று பைல்ஸ்(மூலம்). இந்த பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஆசனவாய் பகுதியை சுற்றி வீக்கம் மற்றும் புண்கள் ஏற்பட்டு மிகுந்த வலி மற்றும் வேதனையை கொடுக்கும். 

Advertisment

இப்படி பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் தங்களது உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அப்படி என்னென்ன உணவுகள் சாப்பிடலாம், தவிர்க்கலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுவது பற்றி பார்ப்போம்.

பைல்ஸ் வருவதற்கான முக்கிய காரணங்கள்:

போதுமான நார்ச்சத்து இல்லாத உணவு முறை, குறைந்த அளவு நீர் அருந்துதல், உடல் பருமன், மலச்சிக்கல்,
நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் மற்றும் சிலருக்கு கர்ப்ப காலங்களிலும் பைல்ஸ் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

Advertisment
Advertisement

பைல்ஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

காரம் நிறைந்த உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதிக காரம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மலம் கழிக்கும் பொழுது ஆசனவாயில் இருந்து அதிக இரத்தம்போக்கு எரிச்சல் போன்ற உணர்வுகள் உண்டாகும். 

கொழுப்பு மற்றும் கார்போஹைடிரேட் உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டியது அவசியம். பால் மற்றும் பால் பொருட்களை அதிகளவு எடுத்துக் கொண்டால் வாயு, வயிறு பிடிப்பு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் உண்டாகும்.  கோதுமை, கோழிக்கறி, காரத்தை தவிர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

What can we do to prevent hemorrhoids? | Dr.G.Sivaraman | Health Basket Health Tips

அதேபோல் எளிதில் செரிக்காத உணவுகள் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. காரமான உணவுகள், எண்ணெய் பொரித்த உணவுகள், மசாலா பொடிகள், காபி, டீ, மது பானங்கள் மற்றும் குறிப்பாக இறைச்சி வகைகளை கட்டாயம் எடுத்து கொள்ள கூடாது.

பைல்ஸ் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி, கீரை மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழம் அதிகம் சாப்பிட வேண்டும். மேலும்  நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும் அதிகம் சாப்பிட வேண்டும்.

பைல்ஸ் நோய் சிகிச்சையில் உணவு முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான உணவு முறையும், வாழ்க்கை முறை மாற்றங்களும் கடைபிடித்தால், பைல்ஸ் நோயை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் முடியும். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Healthy Chicken
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment