ஹைப்போ தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி செயல்பாட்டுக் குறைவினால் ஏற்படுவதாகும். தைராய்டு ஹார்மோன்கள் போதுமான அளவு சுரக்காமல், சமநிலையற்ற நிலையில் இருந்தால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. ஹைப்போ தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறிகள் எடை அதிகரிப்பு, சோம்பல், மறதி, கரகரப்பான குரல், முடி உதிர்தல் போன்றவை ஆகும். மருத்துவர்களின் ஆலோசனைப் படி உணவு உட்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்த பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக சில உணவுகளை தவிர்த்துவிட வேண்டும் என்றும் மருத்துவர் கூறுகிறார். இது குறித்து டாக்டர் இளவரசி அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சோயா பீன்ஸ் மற்றும் அதன் பொருட்கள் டோஃபு, எடமேம், மிசோ போன்றவை ஐசோஃப்ளேவோன்கள் எனப்படும் காம்பவுண்ட் கொண்டுள்ளது. ஐசோஃப்ளேவோன்கள், தைராய்டு வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். தைராய்டு ஏற்கனவே உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். தைராய்டு மருந்தின் செயல்பாட்டைக் குறைத்துவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Can you eat cauliflower , soy when you have thyroid problem?
முட்டைகோஸ், காளிஃப்ளவர், ப்ரொக்கோளி ஆகிய காய்கறிகள் சாப்பிடுவதை தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்த்து விட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். காய்டர் உருவாக காரணமாக இருக்கும் ஒரு சில வேதிப்பொருள் இதில் இருப்பதால் உடலுக்கு பாதிப்பு. மேலும் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கும் என்பதால் மருத்துவ அதை சாப்பிட வேண்டாம் என்கிறார். மேலும் இது ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கானதாகவும் தெரிவித்துள்ளார். இவற்றை சாப்பிடாமல் இருப்பதன் மூலம் அதன் தீவிரத்தை குறைக்க முடியும் என்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.