scorecardresearch

அடிக்கடி ஏற்படும் அஜீரணம், வயிற்று உப்புதலுக்கு இந்த பழம்:  மிஸ் பண்ணாம சாப்பிடுங்க

மேலும் இதில் இருக்கும் நார்சத்து மற்றும் தண்ணீர், வயிற்றின் செயல்பாடுகளை சீராக்கி, மலச்சிக்கலை நீக்கும்.

அடிக்கடி ஏற்படும் அஜீரணம், வயிற்று உப்புதலுக்கு இந்த பழம்
அடிக்கடி ஏற்படும் அஜீரணம், வயிற்று உப்புதலுக்கு இந்த பழம்

நொங்கு வெயிலுக்கு மட்டும் நல்லதல்ல, சில உடல் உபாதைகளையும் இது போக்க உதவுகிறது. குறிப்பாக இந்த சிக்கல் இருந்தால் நீங்கள் நொங்கு கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

வயிறு உப்புதல், தொடர் தலைவலி மற்றும் அஜீரணம், மலச்சிக்கல், வெயிலால் உங்கள் சருமம் நிறம் மாறுவது, போன்ற சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால், நொங்கை எடுத்துக்கொள்ளலாம்.

இது வெள்ளையாக நன்றாக சதைப் பகுதி கொண்டது. மேலும் இதை காலையில் சாப்பிட்டால், அதனுள் இருக்கும் நீர் போன்ற திரவம் இனிப்பாகவும். பிறகு இனிப்பு குறைவாக இருக்கும்.

இந்நிலையில் இது மிகவும் குறைந்த கலோரிகளைத்தான் கொண்டது, இதில் வைட்டமின் பி குறிப்பாக வைட்டமின் பி2 ரிபோபிளாவின் மற்றும் வைட்டமின் பி3 நைசின். மேலும் இதில் இரும்பு சத்து, கால்சியம்,  போட்டாஷியம், பாஸ்பரஸ் உள்ளது.

இது இயற்கையாகவே குளுமையை கொடுக்கும் என்பதால், வெயில் காலத்தில் நமது உடல் வெப்பநிலையை நீட்டிக்க உதவுகிறது.

இதில் சோடியம், பொட்டாஷியம் இருப்பதால், நமது உடலில் உள்ள திரவ நிலையை சமமாக நீட்டிக்க உதவுகிறது. மேலும் எலக்ட்ரோலைட் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் நீர் வறட்சி ஏற்படாது.

இந்நிலையில் இதில் அதிக நார்சத்து மற்றும் தண்ணீர் இருக்கிறது.குறைந்த கலோரிகளும் சேர்ந்து இருப்பதால் உடல் எடை குறைய உதவும்.

மேலும் இதில் இருக்கும் நார்சத்து மற்றும் தண்ணீர், வயிற்றின் செயல்பாடுகளை சீராக்கி, மலச்சிக்கலை நீக்கும்.

இதுபோல  இதில், வைட்டமின் சி இருக்கிறது. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளை  அதிகப்படுத்தும். மேலும் கொலஜனை அதன் செயலை  செய்ய தூண்டுவதால் சருமம் பொலிவாக இருக்கும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: If you suffer from frequent acidity or wake up feeling bloated tadgola