scorecardresearch

கேன்களில் இருந்து நேரடியாக குளிர்பானத்தை குடிக்க வேண்டாம்… இவ்ளோ அபாயம் இருக்கு

குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங், சோடா ஆகியவற்றை கேன்களில் இருந்து நேரடியாக குடித்து வருகிறீர்களா? உடனடியாக அதை நீங்கள் நிறுத்த வேண்டும்.

canned drinks
canned drinks

குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங், சோடா ஆகியவற்றை கேன்களில் இருந்து நேரடியாக குடித்து வருகிறீர்களா? உடனடியாக அதை நீங்கள் நிறுத்த வேண்டும். இந்த கேன்கள் பல நாட்கள் சுத்தப்படுத்தாமல் வைத்திருப்பதால் இதில் கிருமிகள் இருக்க வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் நாம் குடிக்கும் கேன் குளிர் பானங்களை பற்றி எந்த தகவலும் நமக்கு தெரியாது . இந்த கேன்கள், பெரிய தொழில் சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, பெரிய கிடங்குகளில் பாதுகாக்கப்படுகிறது. இந்த இடங்களில் எலி போன்ற உயிரினங்கள் இந்த கேன்களுக்கு மேலே ஓடலாம். எலிகளின் சிறுநீர் , எச்சம் இந்த கேன்களில் இருப்பதால், லெப்டோஸ்பிரோசிஸ்  (  leptospirosis) என்ற நோய் ஏற்படும். இது உருவாக லெப்டோஸ்பிரியா என்ற பேக்டிரியா காரணமாக இருக்கிறது.

இந்த நோய்க்கு சில குறைவான அறிகுறிகள் இருப்பதால், மற்ற நோயுடன் குழப்பிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.  குறிப்பாக சிறிய தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு,  ஆகியவை ஏற்படலாம்.

கல்லீரல் பாதிப்பு,மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படலாம். இந்நிலையில் நீங்கள் கேன்களில் குளிர்பானத்தை குடிப்பதற்கு முன்பு நன்றாக கழுவி, வெள்ளை துணியில் அதை துடைத்த பிறகு குடிக்கவும்.

இந்நிலையில் நாம் குளிர்சாதனம் குடிக்கும் கேன்கள், பல்வேறு இடங்களிலிருந்து வருகிறது. மேலும் பல நாட்கள் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் கேன்களில் இருந்து அப்படியே குடிக்காமல் ஸ்டா அல்லது கிளாசில் ஊற்றி குடிக்கலாம்.

கெமிக்கல்ஸ் : கேன்களின் கூர்மையான வாய்ப்பகுதியில், கெமிக்கல்ஸ் இருக்கலாம். உதாரணமாக பிஸ்பினால் ஏ போன்ற கெமிக்கல்ஸ் இருக்கலாம். இவை உடல் நலக்குறைவு ஏற்படுத்தும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Immediately stop drinking beverages directly from cans

Best of Express