உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அதுவும் டயட் உணவுகள் இல்லாமல் ஈஸியாக தோசை மூலமாகவே இம்யூனிட்டியை அதிகரிக்க ஈஸியான ஒரு டிப்ஸ் இருக்கு.
தோசை சாப்பிட்டு இம்யூனிட்டி அதிகரிக்கலாம். எனவே கூறப்படும் தோசையை வாரம் இரண்டு அல்லது 4 நாட்கள் தொடர்ந்து காலை உணவாக எடுத்து வரலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சைபயிறு
ரேஷன் பச்சரிசி
உப்பு
சீரகம்
பச்சை மிளகாய்
இஞ்சி
கருவேப்பிலை
கொத்தமல்லி
ஒரு டம்ளர் பச்சை பயிறு, கால் டம்ளர் ரேஷன் பச்சரிசி, இரண்டையும் எடுத்து நன்கு கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும். அடுத்த நாள் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை போட்டு அதில் சிறிது உப்பு போட்டு அரைத்து ஒரு இரண்டு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பின்னர் இதில் தோசை ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதற்கு ஒரு சுவையான சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
உளுந்து
சின்ன வெங்காயம்
பூண்டு
காய்ந்த மிளகாய்
தக்காளி
கருவேப்பிலை
கொத்தமல்லி
உப்பு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், இரண்டு தக்காளி போட்டு வதக்கவும். அதில் சிறிது கருவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
நோய் எதிர்ப்புச் சக்தி தரும் தோசை
நல்ல கொரகொரப்பாக அரைத்து வந்ததும் எப்போதும் போல தாளிப்பு சேர்த்து தோசையுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இந்த தோசை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண் சரியாகும். புற்றுநோய் செல்கள் வராமல் இருக்கும். அதேபோல இரும்பு சக்தி அதிகரிக்கும். இந்த தோசைக்கு எந்த வகையான சட்னி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் சுவையாக இருக்கும். மேலும் உடல் எடை குறைப்பதற்கும் இது உதவும்.
இந்த தகவல்கள் அனைத்தும் வித்யா கிச்சன் ஸ்பெஷல்ஸ் என்ற யூடியூப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.