தாய்ப்பாலுக்கு இணையான இந்தப் பால்... கொலஸ்ட்ரால் இருக்கும் மக்கள் நோட் பண்ணுங்க: மருத்துவர் சிவராமன் யோசனை
தேங்காய்ப்பாலில் இருக்கும் முக்கியமான சத்துகள் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தாய்ப்பாலுக்கு இணையான சத்துகள் இதில் நிரம்பி இருக்கின்றன எனவும் அவர் கூறுகிறார்.
தேங்காய்ப்பாலில் இருக்கும் முக்கியமான சத்துகள் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தாய்ப்பாலுக்கு இணையான சத்துகள் இதில் நிரம்பி இருக்கின்றன எனவும் அவர் கூறுகிறார்.
பல வாழ்வியல் நோய்கள் சுமார் 35 முதல் 40 வயதில் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகள் இன்றைய காலகட்டத்தில் பெருகி வருகின்றன.
Advertisment
பல வைட்டமின்கள் கொழுப்பில் கரைந்து தான் நம் உடலுக்கு தேவையான சத்துகளை கொடுப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதனடிப்படையில், கொழுப்பு மிக அதிகமாக செல்லும் போது மட்டுமே அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே, கொலஸ்ட்ரால் பாதிப்பு இருப்பவர்கள் முற்றிலுமாக கொழுப்புகளை தவிர்த்து விடக் கூடாது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சரியான வகையில் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். அதற்கு ஏற்றார் போல் உணவு பழக்க வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக, கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் பலர் தேங்காய் எண்ணெய், தேங்காய் சட்னி போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால், நெய் போன்ற பொருட்களில் இருந்து பெறப்படுவதை போல, தேங்காயில் இருந்து கொலஸ்ட்ரால் ஏறாது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
Advertisment
Advertisements
உதாரணமாக, தேங்காய் பாலில் மோனோலாரின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவியாக இருக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துகிறது. இதுமட்டுமின்றி, தாய்ப்பாலுக்கு நிகரான வகையில் இதில் சத்து இருப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
எனவே, தேங்காயை முற்றிலுமாக தவிர்த்து விட்டால் மோனோலாரின் என்ற சத்து நமக்கி கிடைக்காமல் போய்விடும். அதன்படி, கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் அனைவரும் துரித உணவுகள், அதிகமாக எண்ணெய்யில் பொறித்து எடுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இது போன்று நம் ஆரோக்கியம் மேம்படும் வகையிலான உணவுகளை சரியாக ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Kavi Online Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.