இந்நிலையில் பூசணியில் பல வகை இருக்கிறது. ஒவ்வொரு வகைக்கும் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. தர்பூசணி, கிரிணிப் பழம், முலாம் பழம், வெள்ளை பூசணியில் வெவ்வேறு பயன்கள் இருக்கிறது.
இதில் இருக்கும் ஊட்டத்தை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். 100 கிராம் தர்பூசணியில் : கலோரிகள் 30, கார்போஹைட்ரேட் 7.6 கிராம், புரத சத்து-0.6 கிராம், நார்சத்து – 0.4 கிராம், கொழுப்பு சத்து- 0.2 கிராம் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, பொட்டாஷியம், மெக்னீஷ்யம், லைக்கோபென்னே,
கிரிணிப்பழத்தில்: 34 கலோரிகள், கார்போஹைட்ரேட்-8.2 கிராம், நார்சத்து-0.9 கிராம், புரத சத்து 0.8 கிராம், கொழுப்பு சத்து -0.2 கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாஷியம், மெக்னீஷியம் .
முலாம் பழம்: கலோரிகள் 34, கார்போஹைட்ரேட்- 8.2 கிராம், நார் சத்து- 0.9 கிராம், புரத சத்து - 0.9 கிராம், கொழுப்பு சத்து-0.1 கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மெக்னீஷியம் உள்ளது.
வெள்ளை பூசணி: கலோரிகள்-16, கார்போஹைட்ரேட் 3.8 கிராம், நார்சத்து -0.5 கிராம், புரத சத்து - 0.6 கிராம், கொழுப்பு சத்து – 0.2 கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாஷியம் மெக்னீஷியம் உள்ளது.
தர்பூசணியில் 92 % தண்ணீர் சத்து உள்ளது. மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால், இதய ஆரோக்கியம், எலும்பின் ஆரோக்கியம், மேலும் சில வகை புற்று நோய்களை கூட உருவாகாமல் தடுக்கிறது.
கிரிணிப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ, சி உள்ளிட்டவை ஆரோக்கியமான சருமத்தை தரும். இதில் அதிக போலேட் இருக்கிறது. இவை புதிய செல்களை உருவாக்குவதிலும், அதை சீராக வைத்துகொள்வதிலும். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் அது உதவும்.
இந்த முலாம் பழத்தில் சற்று சுகர் சத்து அதிகம். இதனால் இதை குறைவான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் நார்சத்து உடலுக்கு மிகவும் நல்லது.
வெள்ளை பூசணி, இது மிகவும் குறைந்த கலோரிகளை கொண்டது. சீனாவின் பாரம்பரிய வைத்தியத்தில், விக்கத்தை குறைக்கவும், ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“