scorecardresearch

4 முதல் 10 வாரம்; ரிவர்ஸ் டயட்டிங்: உடல் எடை குறைக்க லேட்டஸ்ட் ட்ரெண்டிங் டெக்னிக் இதுதான்!

உடல் எடை குறைக்க , சில நேரங்களில் ட்ரெண்டிங்கான முறை அனைவராலும் பகிரப்படும். அப்படி பகிரப்பட்ட செயல்முறைதான் ரிவர்ஸ் டயட்டிங். குறிப்பாக உங்கள் மனதை பழக்கப்படுத்த வேண்டும்.

ரிவர்ஸ் டயட்

உடல் எடை குறைக்க , சில நேரங்களில் ட்ரெண்டிங்கான முறை அனைவராலும் பகிரப்படும். அப்படி பகிரப்பட்ட செயல்முறைதான் ரிவர்ஸ் டயட்டிங். குறிப்பாக உங்கள் மனதை பழக்கப்படுத்த வேண்டும்.

டயட் இருந்து உடல் எடை குறைத்துவிடுவார்கள். ஆனால் மீண்டும் உடல் எடை அதிகரித்துவிடும். இந்நிலையில் இப்போதுதான் ரிவர்ஸ் டயட்டிங் உதவும்.

நமது உடல் செயல்பட காரணமாக இருக்கும் மெட்டபாலிக் செயல்பாடுகள் சிலவற்றை, நாம் மாற்றியமைக்க வேண்டும். நமது மெட்டபாலிக் செயல்பாடு எப்போதும், அதிக சக்தியை உள்வாங்கிக்கொண்டு குறைந்த சக்தியை வெளியேற்றும். இதனால்தான் உடல் எடை குறைவது மெதுவாகிறது.

போட்டிகளுக்காக உடல் கட்டமப்பை பயிற்சி செய்து மாற்றும் நபர்கள், மத்தியில் இந்த ரிவர்ஸ் டயட்டிங் பிரபலமாக உள்ளது. போட்டிக்கு பிறகு அதிக உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு இந்த டயட் பயன்படுகிறது. அதிக நாட்கள் நாம் டயட்டிங் செய்யும்போது, நமது ஹார்மோன்களில் குறிப்பாக லெப்டின், கெரிலின், இன்சுலின் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றம் உடல் எடை குறையாமல் இருக்க காரணிகளாக மாறிவிடும்.

இந்த ரிவர்ஸ் டயட்டை அதிக நாட்கள் கடைபிடிக்க கூடாது. குறிப்பாக 4 முதல் 10 வாரங்கள் வரை நாம் இதை மேற்கொள்ள வேண்டும்.

நாம் டயட்டிங் செய்யும்போது, எடுத்துக்கொண்ட கலோரிகளில் இருந்து 50 முதல் 100 கலோரிகளை வாரம்தோறும் அதிகப்படுத்தலாம். இதனால் உடல் எடை உடனே அதிகரிக்காது.

பல மாதங்கள் தொடர்ந்து டயட்டிங் உணவுகளை பின்பற்றும்போது, ஒருவித எரிச்சல்,  சோர்வான உணர்வு ஏற்படும். இதனால் ரிவர்ஸ் டயட்டிங்கை பின்பற்றும்போது, நமது மனத்திற்கு ஒரு நிரைவு கிடைக்கும்.

யாரெல்லாம் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

தனது தற்போதைய உடல் எடையில் இருந்து 80% கலோரிகள் குறைத்தவர்கள், இந்த செயல்முறையை பின்பற்றலாம்.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Ind out all about reverse dieting the latest weight loss technique trending