Advertisment

வீட்ல இட்லி மாவு இல்லையா? இன்ஸ்டன்ட் டின்னர் இப்படி பண்ணுங்க!

இட்லி, தோசை மாவு உங்களால் தயார் செய்ய முடியவில்லை அல்லது நீங்கள் எப்போதும் வாங்கும் கடைகளில் கிடைக்கவில்லை என்றால், எப்படி டின்னர் செய்யப்போகிறோம்? என்று கவலைப் பட வேண்டும்.

author-image
WebDesk
New Update
Instant dinner without idli dosa batter tips in tamil

இன்ஸ்டன்ட் டின்னர் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தென்னிந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமானவையாக இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை உள்ளன. இந்த உணவுகளுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமையை இவை அனைத்தும் அரிசி மற்றும் உளுந்து சேர்த்த மாவில் தயார் செய்யப்படுவது தான். அப்படி அரிசி, உளுந்து சேர்த்த மாவில் பஞ்சு போன்ற இட்லிகளை சுடலாம். அந்த மாவு புளித்தால் அவற்றை தோசைகளாக ஊற்றி ருசிக்கலாம்.

Advertisment

ஒருவேளை இட்லி, தோசை மாவு உங்களால் தயார் செய்ய முடியவில்லை அல்லது நீங்கள் எப்போதும் வாங்கும் கடைகளில் கிடைக்கவில்லை என்றால், எப்படி டின்னர் செய்யப்போகிறோம்? என்று கவலைப் பட வேண்டும். உங்களுக்காகவே இன்ஸ்டன்ட் டின்னர் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு வழங்கியுள்ளோம். 

தேவையான பொருட்கள்: 

அரிசி மாவு - 200 கிராம்
ரவை - 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிறது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கிறது)
இஞ்சி - சிறிதளவு (சீவியது)
கருவேப்பிலை - (பொடியாக நறுக்கிறது)
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - 3 சிட்டிகை
கெட்டித்தயிர் - 3 ஸ்பூன்

செய்முறை 

முதலில் ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் மேலு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து அவற்றை ஒரு கரண்டியால் மிக்ஸ் செய்து, அதே கரண்டியைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கிளறவும்.

இவை இட்லி மாவு பதத்திற்கு வந்த பிறகு பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி, சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்றாக ஊற வைத்துக்கொள்ளவும். 

இப்போது குழி பணியாரம் செய்யும் கடாயை எடுத்து சூடேற்றவும். அவை நன்றாக சூடானதும், அதில் குழிகளில் 1/4 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும், அதில் சிறிய கரண்டி மூலம் மாவு எடுத்து ஊற்றவும். அனைத்து குழிகளிலும் ஊற்றிய பிறகு மூடியால் மூடி மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு அவற்றை பணியாரம் எடுக்கும் கரண்டியைக் கொண்டு பிரட்டி எடுக்கவும். அதேபோல் எல்லா பணியாரத்தையும் செய்து கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான டின்னர் தயார். இவற்றுடன் உங்களுக்கு பிடித்த சட்னியையும் சேர்த்து ருசிக்கலாம்.

இட்லி தோசை மாவு இல்லாத நேரத்துல இப்படி அருமையாக செய்யலாம் வாங்க | Instant Dinner Recipes

Posted by Amma Samayal Videos on Monday, April 11, 2022

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment