நாம் வீட்டில் எப்போதும் இட்லி, தோசை மாவு ஃபிரிட்ஜில் இருக்கும். அதைத்தான் எப்போதும் பயன்படுத்துவோம். ஒருவேளை மாவு தீர்ந்துவிட்டால் அன்று உப்புமாதான் அனைவருக்கும். மாவு தீர்ந்தால் கூட தோசை செய்யலாம் அதுவும் இன்ஸ்டண்டா என்றால் உங்களால் நம்ப முடிகிறது. அந்த இன்ஸ்டண்ட் தோசை எப்படி செய்வது தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 200 கிராம்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1 நன்கு நறுக்கியது
இஞ்சி- சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் – 1
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப
சீரகம் – அரை ஸ்பூன்,
மிளகு – அரை ஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து நறுக்கியது
செய்முறை
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை, சிறு துண்டு இஞ்சி ஆகியவற்றை எடுத்துகொள்ளவும். அடுத்ததாக கருவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்னர் காய்ந்த மிளகாயை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 200 கிராம் அரிசி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
பிறகு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ,கருவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து ஒன்று சேர கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இவற்றுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து விடவேண்டும். இந்த மாவையும் தண்ணீர் பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 10 முதல் 15 நிமிடத்திற்கு மாவை அப்படியே ஊறவிட வேண்டும். அதன் பிறகு எண்ணெய் சேர்த்து, தோசை போட்டு எடுக்கவும்.