தென்னிந்தியாவின் தினசரி உணவுகளில் ஒன்று இட்லிதான் என்று உறுதியாகச் சொல்லலாம். இட்லி செய்வது என்பது ஒரு பெரிய பிராசஸ். அரிசி, உளுந்து ஊற வைத்து, மாவு அரைத்து, அதைப் புளிக்க வைத்து பிறகு மாவு கரைத்து பிறகு இட்லி சுட வேண்டும். சில நேரங்களில் வீட்டில் இட்லி மாவு இல்லாத போது, சிலர், கடைகளில் இட்லி மாவு வாங்கி இட்லி சுடுவது உண்டு.
இட்லிக்கு மாவு அரைப்பது என்பது சவாலான ஒன்று தான். அதனாலேயே பலரும் இட்லி மாவு அரைப்பது இல்லை. கடைகளில் மாவு வாங்கி பயன்படுத்தி கொள்கிறார்கள்.
ஆனால் இந்த மாதிரி மாவு அரைத்து பாருங்கள் அடிக்கடி இட்லி தோசை செய்வீர்கள். மாவு தீரவும் தீராது புளித்தும் போகாது.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி
உளுந்து
மொத்தமாக அரைக்க உள்ளதால் அதிக அளவில் எடுத்து கொள்ளலாம்.
செய்முறை
நான்கு படி இட்லி அரிசி ஒரு படி உளுந்து எடுத்து சுத்தம் செய்து பவுடராக தனித்தனியே அரைத்துக் கொள்ளவும்.இதனை பூச்சி விழாதவாறு இரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்து தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தலாம்.
இப்போது இதை கரைப்பதற்கு ஒரு கப்பில் மூன்று கப் மாவு ஒரு கப் உளுந்த மாவு தேவையான அளவு உப்பு போட்டு கலந்து தண்ணீர் ஊற்றி கரைத்து ஒரு எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
உடனடி இட்லி மாவு/readymade idly batter
இவற்றை நன்கு கை வைத்து கரைத்து வைக்க வேண்டும். இதனை ஃபிரிட்ஜியில் வைத்து கூட பயன்படுத்தலாம். பின்னர் இதை எப்போதும் போல இட்லி தோசை ஊற்றி சாப்பிடலாம். நல்ல சாஃப்ட் மற்றும் சுவையாகவும் இருக்கும்.
இந்த தகவல்கள் கலா அம்மன் கிச்சன் சேனலில் இருந்து பெறப்பட்டது.