இட்லி மாவு வைத்து இட்லி சுட முடியும். ஆனால் முறுக்கு சுட முடியும் என்று எத்தனை பேருக்கு தெரியும். ஆம் இட்லி மாவில் கூட சுவையான முறுக்கு செய்யலாம். சாப்பிட மொறுமொறுன்னு ருசியாக இருக்கும். இட்லி மாவு வைத்து முறுக்கு சுடுவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு
பொட்டுக்கடலை பொடி
மிளகாய் தூள்
ஓமm
எள்
பெருங்காயத்தூள்
எண்ணெய்
செய்முறை
ஒரு பவுலில் புளிப்பு இல்லாத ஒரு கப் இட்லி மாவு, பொட்டுக்கடலை பொடி, மிளகாய் தூள், ஓமத்தை கையில் நசக்கி இவை அனைத்தையும் சேர்க்கவும்.
பிறகு அரை ஸ்பூன் எல், பெருங்காயத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கலந்து கொள்ளவும். இட்லி மாவில் இருக்கும் ஈரப்பதமே போதுமானது.
மாவு பதம் வரவில்லை என்றால் குறைவாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர் சூடான எண்ணெயை அரை குழி கரண்டி எடுத்து மாவில் சேர்த்து பிசைந்து விடவும்.
1கப் இட்லிமாவு இருக்கா 5நிமிஷத்தில் சுவையான மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்/Instant Easy Snacks Recipe Tamil.
பிசைந்த மாவை எடுத்து முறுக்கு ஒலக்கில் போட்டு ஒரு கரண்டியில் எண்ணெய் தடவி அதில் பிளிந்து எடுத்து எண்ணெயில் போட்டு சுட்டு எடுத்தால் எப்போதும் போல முறுக்கு ரெடி ஆகிவிடும்.
எப்போதும் போல முறுக்கு சுவையிலேயே இருக்கும். சாப்பிடவும் நன்றாக மொறு மொறுன்னு இருக்கும்.
இனி வீட்டில் யார் முறுக்கு கேட்டாலும் இந்த முறையில் ட்ரை பண்ணுங்கள். சுவையாகவும் இருக்கும் சட்டுன்னு செய்தும் கொடுக்கலாம். கடைகளில் இனி வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது.