வெறும் 6 பொருள் போதும் இன்ஸ்டன்ட் பாயாசம் சட்டுன்னு செய்து விடலாம். ஸ்வீட்ஸ் க்ரேவிங்ஸ் இருக்கும்போது இதை ட்ரை பண்ணுங்கள். இனிப்பு சாப்பிடனும்னு தோனுதா அப்போ ஜவ்வரிசி பாயாசம் ஈஸியா வீட்டிலேயே ட்ரை பண்ணலாம்.
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி
சர்க்கரை
பால்
ஏலக்காய்
முந்திரி
நெய்
செய்முறை
ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் ஜவ்வரிசியை வறுக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பாதி பால் மற்றும் நீரை சேர்த்து கொதிக்க விடவும். ஜவ்வரிசியை சேர்த்து அதன் நிறம் மாறுமளவிற்கு வேக விடவும்.
பின்னர் மீதமுள்ள பாலையும் சேர்த்து கலந்து கொதிவிடவும். நன்றாக வேக விடவும். அதில் வாசனைக்காக ஏலக்காய் பொடி சேர்க்கவும். பின்னர் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
முந்திரி நெய்யில் வறுத்து சேர்த்தால் சுவையான ஜவ்வரிசி பாயாசம் ரெடி. இதனை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.
எல்லோர் வீட்டிலும் இருக்கும் இந்த 6 பொருட்களை வைத்து ஈஸியாக ஜவ்வரிசி பாயாசம் செய்து விடலாம். சட்டுன்னு உறவினர்கள் யாராவது வந்தால் உடனே இதை செய்து கொடுக்கலாம். எல்லோருக்கும் பிடிக்கும்.நனக்கும் ஸ்வீட் க்ரேவிங்ஸ் இருக்கும்போது இதை செய்து சாப்பிடலாம்.