தென்னிந்திய புகழ்பெற்றது ரசம். ரசத்திற்கு ரெடி மிக்ஸ்/ ரசம் ப்ரீமிக்ஸ் பவுடர் ரெசிபி எப்படி செய்வது என்று புவனா’ஸ் கைமனம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
ரசம் செய்ய தெரியாதவர்கள் அல்லது அவசரத்திற்கு ரசம் வைப்பவர்கள் ஏன் தினமும் ரசம் வேண்டும் என்று கேட்பவர்கள் கூட இந்த பொடியை வைத்து ரசம் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு 1 கப் தனியா 2 கப் சீரகம் 3/4 கப் மிளகு 1/4 கப் புளி 1 சிறிய அளவு எலுமிச்சை சிவப்பு மிளகாய் 12-15 மஞ்சள் 2 தேக்கரண்டி உப்பு 3 மேசைக்கரண்டி பெருங்காயம் 2 தேக்கரண்டி கறிவேப்பிலை
Advertisment
Advertisements
செய்முறை
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் தனித்தனியாக வறுத்து ஆறவைக்கவும். இதனை அரைப்பதற்கு முன்பு மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
பின்னர் இதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை வறுத்து சேர்த்து ஆறவிட்டு ஒரு பாட்டிலில் வைத்து கொள்ளலாம். எப்போது எல்லாம் ரசம் சாப்பிட தோன்றுகிறதோ அப்போது எல்லாம் இந்த பொடி எடுத்து பயன்படுத்தலாம்.
சாப்பிடும் போது இந்த ரசப்பொடியில் சிறிது சுடுதண்ணீர் ஊற்றினால் ரசம் ரெடி. தேவைப்பட்டால் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கலாம்.