வெந்நீர் மட்டும் விட்டாப் போதும்; ஒரே நிமிடத்தில் டேஸ்ட்டி ரசம் ரெடி: 6 மாதம் வரை இப்படி யூஸ் பண்ணலாம்!
இன்ஸ்டன்ட் ரசப்பொடி எவ்வாறு ஈசியாக செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இந்தப் பொடி சுமார் 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
இன்ஸ்டன்ட் ரசப்பொடி எவ்வாறு ஈசியாக செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இந்தப் பொடி சுமார் 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
ரசம் வைப்பது எளிதானதாக தோன்றினாலும் அதில் புளி ஊறவைப்பது, மசாலா அரைப்பது, தாளிப்பது என பல விஷயங்களை செய்ய வேண்டியதாக இருக்கும். ஆனால், இன்ஸ்டன்டாக ரசம் வைப்பது எப்படி என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக ரெடிமேட் ரசப்பொடி எப்படி செய்யலாம் என்று சூப்பர் கிச்சன் யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisment
முதலில், 100 கிராம் துவரம்பருப்பை 1-2 நிமிடங்கள் சூடாகும் வரை வறுக்க வேண்டும். அடுத்து, இரண்டு கப் காய்ந்த கொத்தமல்லி விதைகளை சுமார் இரண்டு நிமிடங்கள் வறுக்க வேண்டும். பின்னர், அரை கப் சீரகம் மற்றும் கால் கப் மிளகு சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கலாம்.
ஒரு எலுமிச்சை அளவு புளியை சுத்தம் செய்து, விதைகளை நீக்கி, தனியாக பிரிக்க வேண்டும். இதனுடன் 20 காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து, புளியில் உள்ள ஈரம் போகும் வரை வறுக்க வேண்டும். மிளகாய் மற்றும் கறிவேலை நிறம் மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மூன்று பெரிய பூண்டு பற்களை உரித்து, தண்ணீர் சேர்க்காமல் நசுக்க வேண்டும். இவற்றை ஐந்து நிமிடங்கள் வதக்க வேண்டும், பூண்டின் பச்சை வாசனை நீங்கி, வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
Advertisment
Advertisements
வறுத்த பூண்டு தவிர மற்ற அனைத்து பொருட்களையும், உப்பு, 1.5 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த கலவையை தண்ணீர் சேர்க்காமல் சற்று பொடியாக அரைக்க வேண்டும். அடுத்து, வறுத்த பூண்டை சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து, பொடியுடன் நன்றாக கலக்க வேண்டும். ரசம் தெளிவானதாக இருக்க, பொடி மிகவும் மென்மையாக இல்லாமல், சற்று கரகரப்பாக இருக்க வேண்டும்.
ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம், 4-5 காய்ந்த சிவப்பு மிளகாய், மற்றும் 4-5 கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். கடுகு வெடித்து வெள்ளை நிறமாக மாறும் வரை வறுக்கலாம்.
இந்த சூடான தாளிப்பை தயார் செய்து ரசப்பொடியுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த ரசப்பொடியை முழுமையாக ஆறவைத்து, பின்னர் காற்று நுழையாத டப்பாவில் சேமிக்க வேண்டும். இது ஆறு மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
அதன்படி, ரசம் தயாரிக்கும் போது இந்தப் பொடியை மட்டும் தேவையான அளவு எடுத்து அத்துடன் சுடுதண்ணீர் சேர்த்தால்ல் சுவையான ரசம் தயாராகி விடும்.