நம்முடைய வீடுகளில் சாம்பார் தவிர்க்க முடியதா டிஷ் ஆக இருந்து வருகிறது. இவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவற்றுக்கும் சிறந்த ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில், நம்முடைய வீட்டில் சாம்பார் தயார் செய்ய முக்கியமாக தேவைப்படும் ஒரு பொருள் பருப்பு.
பருப்பில் பல வகை உண்டு. சாம்பாருக்கு என துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூரு பருப்பு போன்றவற்றில் சாம்பார் தாயார் செய்தால் சிறப்பாக இருக்கும். தற்போது விலைவாசி உயர்ந்து வருவதால், பருப்பு அதிகம் வாங்க முடியாத சூழல் இருக்கிறது. ஆதலால், பருப்பு இல்லாமல் எப்படி சாம்பார் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு
வெங்காயம் - 1/2
கருவேப்பிலை
வர மிளகாய் - 2
தக்காளி - 1 சிறியது
உப்பு - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 3 டீஸ்பூன் (தண்ணீரில் கரைத்தது)
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு குக்கர் எடுத்து அதில் பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். இவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 3 விசில் வந்த உடன் அடுப்பை அனைத்து விடவும்.
குக்கரில் இருக்கும் ஆவி போனவுடன், அதில் இருக்கும் தண்ணீரை மட்டும் தனியாக வடித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், குக்கரில் இருப்பவற்றை ஒரு கரண்டி அல்லது மத்து மூலம் நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதன்பின்னர், அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு சேர்த்து பொரிய விடவும். பிறகு, வெங்காயம், கருவேப்பிலை, வர மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் தனி மிளகாய் தூள், மல்லித்தூள், குழம்பு மிளகாய்த்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
பிறகு, ஏற்கனவே கடைந்து வைத்துள்ளதை இவற்றுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இவை கொதித்து வந்த பிறகு, கரைத்து வைத்துள்ள கடலை மாவு சேர்த்து கொதிக்க விடவும்.
இவை நன்கு கொதித்தவுடன் கடைசியாக பெருங்காயத்தூள், கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி விடவும். சிறிது நேரம் கழித்து கீழே இறக்கினால், டேஸ்ட்டியானா பருப்பு இல்லாத சாம்பார் ரெடி. இந்த சாம்பாரை இட்லி, தோசை, சாதம் என எல்லா உணவுகளுடனும் சேர்த்து ருசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.