வழக்கமான, சட்னி போல், அல்லாமல் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
வேர்கடலை – ஒரு கப்
பச்சை மிளகாய் -8
சின்ன வெங்காயம் – 6
பூண்டு சில பற்கள்
இஞ்சி – 2 துண்டுகள்
பொட்டுக்கடலை
பொதினா
சீரகம்
புளி
கொத்தமல்லி
தேங்காய் துண்டுகளாக நறுக்கியது
எண்ணெய்
உப்பு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வேர்கடலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சேர்த்து வதக்கவும். நன்றாக வறுபட்டதும், பூண்டு, இஞ்சி, பொட்டுக்கடலை , பொதினா சேர்கக்வும். இது நன்றாக வதங்கியதும், புளி, சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இவை அனைத்தும் ஆறியதும், கொத்தமல்லி, தேங்காய் துண்டுகள் சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து கடுகு தாளித்து இந்த சட்னியில் சேர்க்க வேண்டும்.