கிறிஸ்துமஸ் என்றாலே வையின் நினைவுதான் வரும். இந்நிலையில் பாரம்பரியமான முறை வையின் செய்வது மிகவும் நேரம் எடுக்கும் விஷயம் கூடுதலாக அதற்கு பல வழிமுறைகள் இருக்கிறது. ஆனால் பாரம்பரி வையின் சுவையை நாம் இந்த இன்ஸ்டன்ட் வையின் மூலமே பெற முடியும். அதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
கிரேப்ஸ்- 1 கிலோ
சுகர் -3/4 கிலோ
பட்டை- 2
எலக்காய்- 2
கிராம்பு – 4
ஈஸ்ட்- 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர்- 3 லிட்டர்
செய்முறை
கிரேப்ஸை நன்றாக கழுவ வேண்டும். பல முறை கழுவிய பிறகு, ஈரம் இல்லாத அளவிற்கு துடைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஈஸ்ட், சர்க்கரை மற்றும் சுடான நீர் எடுத்துகொள்ள வேண்டும். அதை நன்றாக கலந்துவிடுங்கள். தற்போது அதை மூடி வைத்துவிடுங்கள். நன்றாக பொங்கி வர வேண்டும்.
தற்போது வேறு பாத்திரத்தை சூடாக்கி, அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும். தொடர்ந்து அதில் கிரேப்ஸ், பட்டை, கிராம்பு, எலக்காய், ஆகியவற்றை சேர்க்க வேண்டும். தண்ணீர் சூடானதும் அதில் சரக்கரை சேர்க்கவும்.
சில நிமிடங்கள் கழித்து கிரேப்ஸை நன்றாக உடைத்து விட வேண்டும். அப்போதுதான் எல்லாவற்றுடனும் நன்றாக கலந்து சிவப்பு நிறம் கிடைக்கும். 15 நிமிடங்கள் வரை இதை தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு அடுப்பை அணித்துவிட்டு சூடு ஆறும் வரை காத்திருக்கவும்.
தொடர்ந்து இந்த சாறை கண்ணாடி பாத்திரத்தில் உள்ள கலவையுடன் சேர்க்க வேண்டும். அந்த கண்ணாடி பாத்திரம் முழுவதுமாக நிறையக்கூடாது. அதில் பாதி அளவு வரைதான் இருக்க வேண்டும். தொடர்ந்து ஈஸ்டு சேர்த்து முடிவைக்கவும். இந்த கண்ணாடி பாத்திரத்தை இருக்கமான துணியை வைத்து கட்டுங்கள். குறைந்தது 3 நாட்களுக்கு தினமும், இந்த கண்ணாடி பாத்திரத்தை திறந்து கிளர விட வேண்டும். 4 வது நாளில் இந்த சாறை வடிக்கட்ட வேண்டும். தற்போது சுவையான வையின் தயார். அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டும் என்றால் குளிர்சாதனப்பெட்டியை பயன்படுத்துங்கள்.