Advertisment

இன்டெர்மிட்டென்ட்  பாஸ்டிங் உடல் எடை குறைக்க உதவுமா?  புதிய ஆய்வு கூறும் தகவல்

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது தற்போது அதிக பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மூலம் நீண்ட நாட்கள் வரை எடை குறைக்க முடியாது என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்டெர்மிட்டென்ட்  பாஸ்டிங் உடல் எடை குறைக்க உதவுமா?  புதிய ஆய்வு கூறும் தகவல்

இன்டெர்மிட்டென்ட்  ஃபாஸ்டிங் என்பது தற்போது அதிக பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மூலம் நீண்ட நாட்கள் வரை எடை குறைக்க முடியாது என்று கூறப்படுகிறது.

Advertisment

சாப்பிடும் அளவு மற்றும் அதன் தாக்கம்தான் உடல் எடை அதிகரிக்க காரணமே, தவிற எந்த நேரத்தில் உணவு சாப்பிடுகிறோம் என்பதல்ல என்று கூறப்படுகிறது.

சாப்பிடும் கலோரிகளை குறைத்து கொண்டவர்கள், 6 மாதங்களில் 8 % பேர் உடல்  எடை குறைத்தார்கள். இதுவே இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் 4% பேர் உடல் எடை குறைத்தார்கள்.

இதுபோல சாப்பிடும் கலோரிகளை குறைத்தவர்களுக்கு, இன்சுலின் செயல்பாடு, குளுக்கோஸ் அளவு ஆகியவை ஆரோக்கியமான நிலையில் இருந்தது.

மேலும் கூடுதலாக மனிதர்கள் வாழும் காலம் அதிகபடியாக வாய்ப்புள்ளது. மேலும் வயதாவது தொடர்பாக ஏற்படும் நோய்யை குணப்படுத்த உதவுகிறது.

கலோரியை கட்டுப்படுத்தும் முறையில், ஒரு நாளைக்கு 5 முறை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அளவு குறைவாக இருக்க வேண்டும். குறிப்பாக காய்கறி, பழங்கள், மாமிசம், முட்டை என்று கலோரிகள் குறைவாக இருக்கும் உணவாக எடுத்துக்கொண்டால் உடல் எடை கூடாது. குறிப்பாக 400 முதல் 600 கலோரிகள் வரை தான் நாம் சாப்பிட வேண்டும்.

கூடுதலாக Intermittent fasting செய்வதால், ஹார்மோன்கள் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். உடலுக்கு தேவையான இன்சுலின் மற்றும் இதர ஹார்மோன்கள் சுரப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

மேலும் தண்ணீர் மற்றும் பானங்கள் எடுத்துக்கொள்வது குறைந்தால் வரட்சி ஏற்படும். அதுபோல உடலில் இருக்கும் நீரும் சிறுநீராக வெளியாகும் போது வரட்சி அதிகமாகும்.

மேலும் சரியாக திட்டமிடாமல் இந்த டயட் முறையை மேற்கொண்டால், உடலுக்கு தேவையான வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் சரியான அளவில் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

மேலும் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் பலருக்கு இருக்காது. இதனால் அவர்கள் நாள் முழுவதும்  சோர்வாக காணப்படுவார்கள். ஒரு பிசியான நபரால் இந்த டயட்டை பின்பற்ற முடியாது. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment