இப்படி இறால் வடை செய்தால். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்
1 கப் இறால்
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் மல்லிப் பொடி
அரை ஸ்பூன் கரம் மசாலா
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
உப்பு
1 கப் கடலை பருப்பு
1 ஸ்பூன் சீரகம்
அரை ஸ்பூன் சோம்பு
9 சின்ன வெங்காயம்
1 கொத்து கருவேப்பில்லை
4 பூண்டு
1 பெரிய வெங்காயம்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : முதலில் இறாலை சின்னதாக நறுக்க வேண்டும். அதில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளரி. அரை மணி நேரம் கழித்து சிறிய அளவு எண்ணெய்யில் வறுத்து எடுக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் அரை மணி நேரம் ஊறவைத்த கடலை பருப்பு, சீரகம், வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் இறால், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வடை போல் தட்டி பொறித்து எடுக்கவும்.