இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம்பழத்தில் ஒரு ஹெல்தி ஷேக் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
பால் - 2 கப் பேரீட்சைப்பழம் - 15 பாதாம் - 1/4 கப் முந்திரி பருப்பு - 1/4 கப் பிஸ்தா - 1 மேசைக்கரண்டி ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி பால் - 500 மி.லி காய்ச்சி ஆறவைத்தது தேன் - 1 தேக்கரண்டி குங்கும பூ
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு அகல பானில் பால், விதை நீக்கி நறுக்கிய பேரீட்சைப்பழம், ஊறவைத்து தோலுரித்த பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். அடுத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
நன்றாக வெந்ததும் ஆறவிட்டு, மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடுத்து மிக்ஸியில் அரைத்த விழுது, தேன், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து அடித்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான பேரீட்சைப்பழ மில்க் ஷேக் தயார்.