பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பது அவசியம். ஒழுங்கற்ற மாதவிடாய் பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். இதற்கு எளிய தீர்வு நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளது. எள் மற்றும் ஓமம் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகிறது என்று டாக்டர் உஷா நந்தினி தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
Advertisment
எள் மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துகின்றன. தினமும் எள் சாப்பிடுவது அல்லது உணவில் நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்லது
ஓமம் மாதவிடாய் வலியை குறைக்கவும், ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்யவும் உதவுகிறது. இது கருப்பை தசைகளை தளர்த்தி, மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது. எள் மற்றும் ஓமம் இரண்டையும் சேர்த்து டீ செய்து குடிப்பது மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு என்று அவர் கூறுகிறார்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். எள் மற்றும் ஓமம் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு வடிகட்டி, டீயை குடிக்கவும்.
இந்த டீயை தினமும் குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சரியாக 30 நாள் மாதவிடாய் சுழற்சி இருக்கும் என அவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.