scorecardresearch

நீங்கள் சாப்பிடும் விதத்தில்தான் சிக்கலே இருக்கிறது: நிபுணர்களின் கருத்து

குறிப்பாக நாம் தெரிந்துகொண்டே அதிகமாக சாப்பிடுவதில்லை, நாம் உணர்வுகளால் கட்டபட்ட நபர்கள் என்பதால், அதன் மாறுதலுக்கு தகுந்தது போல் உணவு எடுத்துகொள்வதும் மாறுபடும். இதை நமக்கே தெரியாமல் செய்திருப்போம்.

இந்நிலையில் இப்படி நாம் பரவாயில்லை என்று நினைத்தால், உங்கள் உடலை நீங்களே கெடுத்துகொள்கிறீர்கள். இந்நிலையில் நீங்கள் சாப்பிடும் முறை இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

பழங்கள்,காய்கறிகள், நட்ஸ், விதைகள்,  முழு தானியம் ஆகியவற்றில் கூடுதல் நார்சத்து இருக்கிறது. அதை சாப்பிடலாம். ஒரு வேளைக்கு என்று இல்லாமல், நாள் முழுவதும் இதை எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.

எந்த வேளை உணவையும் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. இதனால் பசிதான் அதிகரிக்கும். ஒரு நல்ல காலை உணவுடன் தொடங்குங்கள்.

மேலும் கூடுதலாக தண்ணீர் குடியுங்கள்.  இவை அதிகமாக பசி எடுக்கமால் பார்த்துக்கொள்ளும்.

ஒரு நாளைக்கு முன்று வேலை உணவு மற்றும் 2 அல்லது 3 முறை ஸ்நாக்ஸ் சாப்பிடுங்கள். 4 மணி நேரத்திற்கு ஒரு முறை  ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும்.

இதுபோல அதிகமாக சாப்பிடத் தூண்டும் துரீத உணவுகளை தள்ளிவையுங்கள். இவை அதிகமாக சாப்பிட தூண்டும்.

பிடித்த உணவாக இருந்தால், வேகமாக சாப்பிடாமல், மெதுவாக சாப்பிடுங்கள். இதனால் நீங்கள் பாஸ்தா சாப்பிட்டாலும் அதை அதிகமாக எடுத்துகொள்ள மாட்டீர்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Is binge eating trapping you know how to overcome this eating disorder

Best of Express