பால் பற்றி பல்வேறு தவறான கற்பிதங்கள் உள்ளது. இந்நிலையில் இயற்கையின் முழுமையான பொருள் என்பது பால்தான். இதில் மாக்ரோ மற்றும் மைக்ரோ சத்துகள் இருக்கிறது. புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து உள்ளது. இதுபோல கால்சியம் பி. காம்பிளக்ஸ் குறிப்பாக பி12, வைட்டமின் டி, பொட்டாஷியம், பாஸ்பரஸ் இருக்கிறது.
Advertisment
இந்நிலையில் பால் பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் மட்டுமே அதை சாப்பிடாமல் இருக்கலாம் இந்நிலையில் எந்த நேரத்தில் பால் குடிக்கலாம் என்ற கேள்வி இயல்பாகவே எழும். இதை பற்றி தெரிந்துகொள்ளலாம். காலை உணவில் குறிப்பாக சீரியல்ஸ் உடன் அல்லது அவல், சப்பாத்தியுடன் நாம் பாலை எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும் காலை நாம் அதிக புரத சத்து கொடுக்கும் பாலை எடுத்துக்கொண்டால், நாள் முழுவது நாம் சோர்வடையாமல் இருக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு பால் ஒரு நல்ல தேர்வாக இருக்கும் இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் மற்றும் குறைந்த கிளைசிமிக் லோட் இருக்கிறது.
குறிப்பாக உங்கள் தசைகளை கூடுதலாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் இதை, உடல்யிற்சிக்கு பிறகு குடியுங்கள். இதில் இருக்கும் லுக்சின் என்ற அமினோ ஆசிட், இது தசைகளை உருவாக்கும். உடல் பயிற்சிக்கு பிறகு, நமது உடலின் சதைகளை சரிப்படுத்தி, தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Advertisment
Advertisements
இந்நிலையில் நீங்கள் உடல் எடை குறைக்க வேண்டும் அல்லது நன்றாக தூங்க வேண்டும் என்று நினைத்தால், இரவில் பால் குடிக்க வேண்டும். இதில் டிரிப்டோபன் ( tryptophan) என்ற அமினோ ஆசிட் உள்ளது. இது செரட்டோனின் ( serotonin) மற்றும் மெலடோனினை தூண்டுகிறது. இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
மேலும் ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமனாக இருப்பவர்கள் நிச்சயம் குறைந்த கொழுப்பு சத்து உள்ள பாலைத்தான் குடிக்க வேண்டும். மேலும் வயிறு தொடர்பான சிக்கல் இருப்பவர்கள் பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“