ஜவ்வரிசி வடை ரெசிபியை, இப்படி நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி – கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
வறுத்த வேர்கடலை -1/2 கப்
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி – சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
எலுமிச்சை சாறு – அரை பழம்
சீரக தூள்- 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்
செய்முறை: ஜவ்வரிசியை நன்றாக கழுவி 3 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர், மிக்சி ஜாரில் வறுத்த வேர்கடலையை சேர்த்து தூளாக அரைத்து கொள்ளவும். இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசிக்கவும். இத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரக தூள், உப்பு, ஊறவைத்த ஜவ்வரிசி அரைத்த வேர்கடலை, கொத்தமல்லி இலை, எலுமிச்சைபழச்சாறு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் இன்றி நன்கு மசித்து பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை வடை போல் தட்டி சூடான எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.