தேவையான பொருட்கள்
பலாச்சுளை – 10,
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு, மிளகாய்த்தூள் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பலாப் பழத்தில் இருந்து பலாச்சுளை எடுக்க வேண்டும். சற்று காயாக இருக்கும்படி எடுத்துக் கொண்டு, கொட்டைகளை நீக்கிவிட்டு, நீளவாக்கில் மெல்லிய குச்சி போல் நறுக்கி எடுத்து கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பலாச் சுளைகளை உதிர்த்தது போல் தூவி போட்டு பொரித்து எடுக்கவும். அடுத்து வறுத்த அந்த சிப்ஸில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“